ஆகாயத்தில் ஒரு தாமரை AOT

5/5

7

a K Vijay Anandh review

Astronaut ஆகவேண்டும் என்கிற லட்சியத்துடன் பள்ளிப்படிப்பை தொடரும் கல்பனா, கிராமிய குடும்ப சூழ்நிலை காரணமாக 16 வயதில் பக்கத்து ஊரை சேர்ந்த கிருஷ்ணாவுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்.

முதலிரவில்,  ” Liquid Propellent  திரவ ஊக்கியால்” செயல்படும் ராக்கெட்டை செலுத்திவிடுவதை தான் 99% இல்ல இல்ல 100% ஆண்களும் விரும்புவார்கள்.

ஆனால், கிருஷ்ணா விதிவிலக்கு, தானே அறியாமல் திருமணம் செய்துகொண்ட அந்த சிறுமியின்  Plasma Propellent ராக்கெட்டை. ஆகாயத்தில் அனுப்பும்  – அத்தோடு விண்வெளிக்கு ராக்கெட்டில் பயணிக்கும் கனவை நிறைவேற்ற அன்றிலிருந்து உழைக்கிறார்.

அருமையான ஒரு மோடிவேஷனல் மூவி.

கிருஷ்ணாவாக துல்கர் சல்மான் அட்டகாசமாக நடித்திருக்கிறார். தனது மனைவியின் படிப்பு செலவுக்காக, குஜராத் சுரங்கங்களில் வேலை செய்வது முதல், ஸ்ருதி ஹாசனுக்கு டிரைவராக சேர்வது வரை ஒவ்வொரு கட்டத்திலும் அட்டகாசம்.

கல்பனாவாக நடித்திருக்கும் சாத்விகா வீரவள்ளி, ஸ்கூல் யூனிபார்ம் முதல் விண்வெளி உடை வரை ஒவ்வொன்றிலும் அட்டகாசமாக பொருந்தி போயிருக்கிறார். பல காட்சிகளில் அவரது கண்கள் மட்டுமே பேசுகின்றன.

தனியார் ராக்கெட் நிறுவன உரிமையாளராக ஸ்ருதி ஹாசன், இவரை விட்டால் இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது என்கிற அளவிற்கு,   நடை உடை, உடல்மொழி என்று கலக்கியிருக்கிறார்.

குஜராத் சுரங்கத்தில் கேண்டீனில் வேலை செய்யும் ருஹானி சர்மா, கொள்ளை அழகு.  முதல் பாதியில் இவர் மூலம்  தான் கதை வெளிப்படுகிறது.

சத்விகா மற்றும் ருஹானி விரைவில் தமிழுக்கு வருவார்கள், ஜிவி பிரகாஷ் குமார் படங்களின் கதாநாயகியாக, வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஏனென்றால், ஜிவி  பிரகாஷ் குமார் தான் இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.  பொதுவாக , Motivational வகை படங்கள் சர்வதேச கவனம் பெறும். அந்த வகையில், ஒரு சர்வதேச தரத்தில் இப்படத்திற்கு  இசையமைத்திருக்கிறார்.   குறிப்பாக விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அறிவியல்பூர்வமாக பின்னணி இசைத்திருக்கிறார்.

இந்தப்படத்தின் இயக்குனர் பவன் சடினேனி, இந்தியப்பெண்களை மட்டுமல்ல படம் பார்க்கும் உலகின் எந்த மூலையில் இருக்கும் பெண்களுக்கும் புதிய உத்வேகம் அளித்திருக்கிறார்.

ஆயிரம் தாமரை மொட்டுகள்,  இனி ஆகாயத்தில்!!