a K Vijay Anandh review
டைட்டானிக் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை, காவேரி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்., இன்னும் சொல்லப்போனால் அது கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு செல்லும் ரயிலில் தான் முழுக்கதையும் நடக்கிறது. மூன்று ரயில் சினேகிதர்களின் காதல் அனுபவம் என்கிற ஒற்றை வரியில் அமைக்கப்பட்ட திரைக்கதை சுவராஸ்யம்.
ஐந்தாறு வருடங்களுக்கு முன், ஆனந்தி, கலையரசன், அட நம்ம காளிவெங்கட் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்! அதைப்பார்க்கும் போது, நம்மையறியாமல் நமக்குள்ளும் இளமை ஊஞ்சலாடுகிறது.
காதலானக இருந்து கல்யாணத்துக்கு புரமோட் ஆகும் காளிவெங்கட் கதை, ரசிகர்களை கலகலப்பாக வைத்திருக்கும். கலையரசன் கதை, என்னய்யா இது லட்டு மாதிரி இருக்கும் காதலி ஆனந்தியை இப்படி கோட்டை விட்டுவிட்டாரே என்று வருத்தப்பட வைக்கும். காதலியை கழட்டிவிட்டுவிட்டு வீட்டில் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள போகும் ராகவின் கதை, மாட்டினான் டா என்று யோசிக்க வைக்கும்.
இப்படி மூன்று பேரின் காதல் கதைகளுமே வெவ்வேறு சுவைகளில் ரசிகர்களின் மனதை நிரப்பும்.
அனைத்து ஆறுகளூம் கடலில் சங்கமிப்பது போல, அனைத்து காதல்களும் காவிரியில் சங்கமிப்பது அட்டகாசம்! இயக்குனர் எம் ஜானகிராமனுக்கு வாழ்த்துகள்.
ஆஷ்னா ஜவேரி, இறுதிக்காட்சியில் இன்ஸ்டண்ட் இட்லி மாதிரி கலையரசனின் இன்ஸ்டன் ட் காதலியாகிப்போவது புதுக்கவிதை.
இது மூழ்காத டைட்டானிக்! காத்திருந்து, காப்பாற்றி கரைசேர்த்த தயாரிப்பாளர் சிவி குமாருக்கு பாராட்டுகள்!