a K Vijay Anandh review
Montageகள் ஆக்ரமித்துவிட்ட இன்றைய சினிமாவில், ரொம்ப நாளைக்கு பிறகு, ஒரு ஊட்டி.. ஒரு கொடைக்கானல் சென்று, ஹீரோவும் ஹீரோயினும் காதல் சொட்ட சொட்ட பாடி ஆடும் ஒரு அக்மார்க் டூயட் பாடல், நூதனா..நூதனா.. முகேன் மற்றும் பிரீத்தி அஸ்ராணி அப்படியே MGR உம் சரோஜா தேவியும் என்றால் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். அந்த மாதிரி ஒரு காஸ்டியூம் டிரை பண்ணியிருக்கலாம் என்று படம் பார்க்கும் ரசிகர்கள் ஒத்துக்கொள்வார்கள். சினிமா விமர்சனத்தில் எடுத்த உடனே அந்த பாட்டை பற்றி குறிப்பிட வேண்டுமா ? ஆமாம், இப்படி ஒரு நான் லினியர் கிரைம் திரில்லர் கதையில் D இமானின் இசையில், சட்டென்று கவனம் ஈர்க்கும் ஒரு பாடலை பற்றி குறிப்பிடாமல் எப்படி..!?
நீ எந்த Genre இல் வேண்டுமானாலும் பாடல் எடு, நான் என்னுடைய டிரேட் மார்க் மெலடி ஐ ரசிகனுக்கு கொடுக்கிறேன் என்று இசையமைத்திருப்பார் போலும்.
சிங்கிள் மதராக இருக்கும் சிட்டியில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையின் சேர்மன் சுரேகாவாணி இன் அப்பாவி தனத்தை பயன்படுத்தி அரசியல்வாதியான கஜாராஜாவும் அவரது நம்பிக்கைக்குரிய ஆளான நிதின் சத்யாவும் இணைந்து எவ்வளவு பெரிய அதாவது NIA வந்து விசாரிக்கும் அளவிற்கு தவறிழைக்கிறார்கள் என்பதும் அது எப்படி ஆ ஊ என்றால் அனைத்தையும் வீடியோ எடுக்கும் பிரீத்தி மூலம் வெளிச்சத்துக்கு வந்து கூண்டோடு மாட்டுகிறார்கள் என்பதும் தான் நிறம் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
முதல் பாராவில் இசையமைப்பாளருக்கு கிரெடிட் கொடுத்துவிட்டோம். இயக்குனர் கிருஷ்ணா பல்ராமுக்கு பல விஷயங்களில் கொடுக்கலாம். முக்கியமாக, முக்கிய வில்லன்கள் இருவரையும் தெலுங்கில் இருந்து மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்யாமல் நம்மூர் கஜராஜாவையும், நிதினையும் நடிக்க வைத்ததற்கு.
நிதின் ஒரு முழுமையான வில்லனாக இந்தப்படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
முகேன் – பிரீத்தி காதல் உம் அருமையாக கையாளப்பட்டிருக்கிறது.
தன்யா ஹோப்பும் தன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
முகேன் ஐ போலீஸ் வந்து அள்ளிட்டு போகும் , தன்யா ஹோப் காணாமல் போவார், பிரித்தியும் வீடு திரும்ப மாட்டார், முன்னதாக ஒரு கான்கிரீட் சுவரில் ஒரு பிணம் கிடைக்கும் இவற்றை சரியாக நினைவில் வைத்து கொள்ளவேண்டும். பின்பு தான் ஒவ்வொன்றாக காரண காரியங்களோடு காட்சிகளாக விரியும்.
நிறைய நல்லவர்கள், அவர்களுக்குள் சில கெட்டவர்கள் என்று தோலின் நிறத்தை அல்லாமல், மனதின் நிறமான குணத்தை குறிக்க தான் நிறம் என்று வைத்திருக்கிறார்களோ என்னவோ!
ஒரு நல்ல கிரைம் திரில்லர், குறைகளை மீறி ரசிகர்கள் ரசிப்பார்கள்!
.