a K Vijay Anandh review
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் 2004 இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற பரத், சந்தியா நடித்த காதல் படம் போன்று, காதல் 2 ஆக இருந்திருக்கவேண்டிய படம்.
ஆனாலும், அதில் பரத், சுகுமார் போல இதிலும் சாகிர் மனோ, அர்ஜுன் என்று நண்பர்கள் பட்டையை கிளப்புகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே சாகிருக்கு பிடிக்காமல் போகும், அதாவது முதல் சந்திப்பு முதலே முட்டல் மோதல் என்று ஆரம்பிக்கும் அர்ச்சனா உடன் சாகிர் எப்படி காதல் வயப்படுகிறார் என்பது கவிதையாக சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே காதலை விட மனித நேயம் ஸ்கோர் செய்கிறது.
ஒரு பக்கம் மிஸ் மெட்ராஸ் இன்னொரு பக்கம் நல்ல மாடல்களை தேடி அலையும் சாகிர் மற்றும் அர்ஜுன் என்று இளசுகள் ஏற்றுக்கொள்ளத்தக்க கதை.
துறு துறு என்று சாகிர் மனோ, 80-90 கால கட்ட கதாநாயகர்களை நினைவு படுத்துகிறார். அர்ச்சனா உம் கோபம் துடுக்கு தனம் என்று அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
3 பாய் பிரண்டுகள் 3 சிம் கார்டுகள் என்று இன்றைய இளசுகளுக்கே உரிய குறும்புடன் அனிதா கதாபாத்திரம். கடைசியில் அதில் ஒருவன் அவளை பாலியல் தொழிலாளி ரேஞ்சுக்கு கன்சிடர் பண்ண வெகுண்டெழுந்து ஒவ்வொரு சிம் கார்டாக கழட்டி கடலில் விசுவதும், சிம் கார்டுகள் ஒவ்வொருத்தனாக மாறி கடலில் விழுவதும் அற்புதமான காட்சி அமைப்பு. அவரை அறிமுக நாயகன் ஶ்ரீமன் கரம் பிடிக்கிறார். இயக்குனர் AC சௌந்தர் இன் இது போன்ற சின்ன சின்ன சுவாரசியமான காட்சி அமைப்புகள் படத்திற்கு பலம்.
இறுதியில் கதாநாயகி விபத்தில் சிக்கிக்கொள்ளும் காட்சியை இன்னும் கொஞ்சம் யோசித்து படமாக்கியிருக்கலாம். அந்த விபத்தில் நாயகனும் சம்பந்தப்பட்டிருந்தால் இயக்குநர் எதிர்பார்த்த கிளைமாக்சுக்கு 100% நியாயம் கற்பிக்கப்பட்டிருக்கும்.
மௌன மொழியில் ஒரு காதல் கவிதை!!