ஜெடூசி

Rating 3/5

17

a K Vijay Anandh review

கல்வித்தந்தைகள் பலான  தந்தைகளாகத்தான் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு ஜெம் வீரமணி கேஸ் பெரிய உதாரணம்.

அப்படி ஒரு பலான வில்லனாக A.வெங்கடேஷ் மிரட்டியிருக்கிறார். நீதிபதியின்  கையில் உள்ள பேனா அவரை தண்டிக்க தவறினாலும் அவரது கொண்டையில் குத்தியிருக்கும்    ஜெடூசி கொண்டு கதாநாயகன்   ஶ்ரீiதர்,  நீதிமன்ற  வளாகத்திலேயே வில்லனுக்கு மரணதண்டனை கொடுக்கிறார்.

இயக்குனர் நடராஜ் ஏகாம்பரம் குழுவினரின் சிந்தனையில் உதித்த நல்ல காட்சி அமைப்பு.

பழங்குடி மாணவி காவிரியாக வரும் சுவேதா சிறப்பாக நடித்திருக்கிறார். பழங்குடி உடையில் கொண்டையில் ஜெடூசி குத்தி கொண்டு வரும் அவர், கல்லூரியில் சேர்ந்த பின்னரும் உடைகளை மாற்றினாலும் ஒப்பனையில் மாறாமல் இருப்பது அழகு. ஜெடூசி மற்றும் மூக்குத்தி என மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கதாநாயகன் ஶ்ரீதர், முதல்பாதியில் நீண்ட தலைமுடி தாடி என்று சடையோனாகவே  ( சிவன் ) வருகிறார்.  இரண்டாவது பாதியில் அவரது ஒப்பனை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிளாக் பாண்டி, வழக்கம் போல காமெடி செய்கிறார்.

பத்திரிகையாளராக வந்து தொடர் கொலைகளுக்கு காரணமான குற்றவாளியை பொறி வைத்து பிடிக்கும் கதாபாத்திரத்தில் சினி யுதன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பாவா செல்லத்துரை நாயகியின் அப்பாவாக கிராமத்து பெரியவராக இயல்பாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் அருவி மதன் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கல்வித்தந்தை என்கிற போர்வையில் அப்பாவி மாணவியரின் கல்வி கனவை தங்களது கலவிக்கனவு  மூலம் சீரழிக்கும் அபாயகரமான மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.