a K.Vijay Anandh review
ஒரு சிறந்த புலனாய்வு அதிகாரியாக சமீபத்தில் கொலை என்கிற படத்தில் துப்பு துலக்கிய விஜய் ஆண்டனி இந்த படத்தில் சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறார்.
India, the vision and threats படத்தின் தலைப்பான ரத்தம் என்பதை விட படத்தில் ரஞ்சித் குமார் என்கிற புலனாய்வு பத்திரிகையாளராக விஜய் ஆண்டனி எழுதி இருப்பதாக சொல்லப்படும் இந்த புத்தகத்தின் தலைப்பு வசீகரித்து இருக்கிறது, இந்த அற்புதமான தலைப்பில் நிஜமாகவே யாரேனும் புத்தகம் எழுதலாம்.
பொதுவாகவே ஒரு குற்றச் செயலை புலனாய்வு செய்யும் பத்திரிகையாளர்கள் கிட்டத்தட்ட அரசின் புலனாய்வு அமைப்புகளுக்கு இணையானவர்களே என்றால் மிகையாகாது.
அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் ஆவது கையில் ஏதேனும் ஒரு ஆயுதத்தை தற்காப்புக்காக உடன் வைத்திருப்பார்கள். ஆனால் புலனாய்வு பத்திரிகையாளர்களை பொருத்தவரை அவர்களின் பேனா மட்டுமே அவர்களது ஆகச்சிறந்த ஆயுதமாக இருக்கிறது.
வானம் என்கிற பத்திரிகையின் நிறுவனராக நிழல்கள் ரவி, அதில் புலனாய்வு பிரிவின் ஆசிரியர்களாக நந்திதா மற்றும் அவரது கூட்டாளிகள் பணி புரிவதும், ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு கொல்கத்தாவில் குதிரை மேய்த்துக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியும் வந்து இணைவது அற்புதமான காட்சி அமைப்புகள்.
இதுவரை பார்த்த படங்களில் அதிபயங்கர குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் நபர்களின் தோற்றம் மற்றும் அவர்களின் வாழ்விடங்கள் மிகவும் வித்தியாசமாகவும் கொடூரமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட கொடூர குற்றங்களை திட்டமிட்டு காவல்துறையினருக்கே சவால் விடும் வகையிலும் அதே நேரம், நாம் பார்க்கும் பக்கத்து வீட்டு மனிதர்கள் போல இருந்து கொண்டு, நம்பவே முடியாத அளவிற்கு சமூகத்தில் கொடூரமான செயல்களை செய்து கொண்டிருக்கும் இந்த அழகான வில்லனை நினைத்தால் ஆச்சரியப்பட தோன்றும். இயக்குனர் CS அமுதனுக்கு பாராட்டுகள்.
விஜய் ஆண்டனி, நந்திதா, மகிமா நம்பியார் , ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் தங்களது பங்கை சிறப்பாக வழங்கி இருக்கிறார்கள்.
உணர்ச்சிவசப்பட்டு சமூக வலைத்தளங்களில், சமூக வெறி, மதவெறி, மொழிவெறி ஆகியவற்றோடு இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம் , ஏன் அவர்களே மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் அவர்களை பலிகடா ஆக்குவதற்கு மிகப்பெரிய கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.
ரத்தம், வித்தியாசமான கோணம்!
mysixer rating 3/5