சமரா

பனிமலையில் ஒரு திகில் புலனாய்வு

238

a K Vijay Anandh review

பனி படர்ந்த ஹிமாச்சல பிரதேஷ் மலை பகுதிகளில் அனாதை பிணங்களை அல்லது விபத்தில் இறப்பவர்களை அனாதை பிணங்கள் போன்று பாவிக்கும் பாவிகளை தட்டிக் கேட்கும் காட்சியில் அறிமுகமாகிறார் ரகுமான். இந்திய பாதுகாப்பு துறைகளில் முக்கிய அதிகாரியான அவர் ஏன் அப்படி காரணங்கள் தெரியாமல் இறந்து போகும் மனிதர்களை பற்றிய புலன் விசாரணையில் இறங்குகிறார் என்பதை காட்சிகளால் விவரிக்கப்படும் பொழுது, அந்தப் பனிமலையில் நாம் இல்லாமலேயே உறைந்து போய் விடுகிறோம்.

1930 களில் ஹிட்லர் காலத்து ஹிட்லர் யூதர்களை கொல்வதற்கு பயன்படுத்திய அதிபயங்கர உயிர் கொல்லி ஆயுதம், அதில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பொருட்டு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜெர்மனியில் அரங்கேற்றப்படும் ஒரு நாட்டிய நாடகம் என்று பின்னணியில் ஒரு அழகான கற்பனையை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்கள்.

இப்பொழுது சமகாலத்தில் அந்த உயிர்க்குள்ளே ஆயுதத்தை இந்தியர்கள் மீது பிரயோகிக்க ஒருவர் வெளிநாட்டில் இருந்து வருகிறார்,  உள்நாட்டில் அந்த சதிக்கு தலைமை தாங்கும் வில்லனை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் சதி நிறைவேறும் முன்பே ஒரு ஆபரேஷனில் அனைவரும் பலியாகிப் போகிறார்கள். பனிமலையில் நடந்த மோதல்களில் அனைவரும் பலியாகிப்போவதால், அவர்களது உடல் கெட்டுப் போகாமல் அப்படியே கிடக்கின்றது. ஒரு ராணுவ மருத்துவரின் மகள் ஏதேச்சையாக அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிணத்தின் மீது விழ அந்த உயிர் கொல்லி அவருக்கும் தொற்றிக் கொள்கிறது. தொடர்ந்து ரகுமான் அறிவுரையின் பேரில் தந்தையையும் மகளையும் தனிமைப்படுத்தி இந்திய ராணுவம் கண்காணிக்கிறது.

நடுவில் அந்த உயிர் கொல்லி ஆயுதம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பரத், அவர் அரவணைத்துக் கொண்டிருக்கும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்.

முடிவில் என்ன ஆகிறது என்பதுதான் பரபரப்பான சமராவின் திரைக்கதை. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சார்லஸ் ஜோசப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிகர்களின் நேர்த்தியான உடல் மொழி மற்றும் அளவான வசனங்கள், அப்படி ஒரு பரபரப்பான திரைக்கதைக்கு நடுவிலும் உடன் பிறந்தவராலேயே விபச்சாரத்திற்கு அனுப்பப்படும் சோனாலி மற்றும் ஒரு வெடி விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் பட்டு அடையாளம் தெரியாமல் மாறிப் போகும் ராணுவ மருத்துவராக வரும் பினோஸ் வில்லையா ஆகியோருக்கு இடையிலான ஒரு அழகான காதல் என்று மிகவும் வித்தியாசமான ஒரு படமாக சமராவை இயக்கி இருக்கிறார்.

இறுதியில் வில்லன் யார் என்று தெரிவதும் சமரா என்றால் என்ன என்பது புரிய வருவதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் அற்புதமும் கலந்த திரை விருந்தாக இருக்கும்.

ரகுமான், சமீபத்திய படங்களில் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த வருகிறார்.  அந்த வகையில், இந்தப் படத்திலும் ஒரு ஸ்டைலிஷ் ஆன அதிகாரியாக பிரமிக்க வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் குறிப்பிட்டுச் செல்லும்படியான இன்னொரு கதாபாத்திரம் அந்த ராணுவ மருத்துவராக நடித்திருந்தார் பினோஜ் வில்லையா, விபத்துக்குப் பிறகு அவரது அந்த விகாரமான தோற்றத்தை காட்டுவதற்காக தினமும் 16 மணி நேரங்கள் ஒப்பனையில் இருந்திருக்கிறார் என்பதை அறியும் பொழுது சிலிர்ப்பாக இருக்கிறது.

தொழில் நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், இசையமைப்பாளர் தீபக் வாரியர் என்று அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

சப்தமே இல்லாமல் வெளியாகி இருக்கும் சமரா, ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான திரை மருந்து என்றால் மிகை ஆகாது.

mysixer rating 4.5/5