a K Vijay Anandh review
காமராஜரையே தோற்கடித்த மக்களை தோற்கடிக்க தேர்தல் அரசியலில் களமிறங்கும் ஒரு உலகப்பணக்கார தமிழன் ராதாரவி.
நேரடியாக களமிறங்காமல், ஒன்றுக்கும் உதவாத, வாயால் வடை சுட்டுக்கொண்டிருக்கும் ஒருவரை அரசியல் கட்சி ஆரம்பிக்க வைத்து பின்னணியில் இருந்து இயக்கி, அவனை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்துவிடுகிறார்.
பணம், குவாட்டர், பிரியாணிக்கு ஓட்டுப்போடும் வாக்காளர்கள் இருக்கும் வரை எதுவேண்டுமானாலும் சாத்தியம் தானே!
ஆனால், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அது முறியடிக்கப்பட்டிருகிறது, இருந்தாலும் இந்தப்படம் பழைய நிகழ்வுகளை அடிப்படையாக எடுக்கப்பட்டு இப்பொழுது வெளியாகியிருக்கிறது.
அந்தவகையில், தேர்தல் அவலங்களை களையவேண்டும் என்கிற ஆதங்கத்தில் இந்தப்படத்தை எழுதி இயக்கிய ராம்தேவின் கனவு , நிஜத்தில் நனவாகியிருப்பதே ஒரு வெற்றிதான்.
செலவுக்கு காசுவேண்டுமா, போடு ஒரு போராட்டம், அல்லக்கைகளுக்கு செலவுக்கு வேண்டுமா, அரேஞ்ச் பண்ணு ஒரு ஆர்ப்பாட்டம் என்று ரவிமரியா அட்டகாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு அவர், கூடவே இருந்து செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கின்றன.
உலகம் முழுவதும் , பல்வேறு பகுதிகளில் இப்படி சந்தர்ப்பவசத்தால் பதவிகளில் அமரும் ஆட்களால் மக்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.
மக்கள் தலைவர்கள் மக்களிலிருந்து தான் உருவாகிறார்கள், உருவாக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.