a K Vijay Anandh review
விடியலையே விரும்பாத ஒரு அரசன் அவனுக்கு பேரு விடியல்…
கிண்டல்யா உங்களுக்கு…
மதுரை வேலுநாச்சியார் பல்கலைக்கழகம்..
நல்ல கற்பனை…
அப்பாவி இந்து சிறுமியருக்கும் பெண்களுக்கும் பாலியல் கொடுமைகளை இசைத்த லண்டன் கிருத்துவனை வேரறுக்க பல நூறு ஆண்டுகளுக்கு முன், முழுக்க முழுக்க பெண்களாலேயே ஏற்படுத்தப்பட்ட தற்காப்பு படை .
இன்னும் கல்வி எட்டிப்பார்க்காத மலைக்கிராமம், அழகு எனும் ஆசிரிய தேவதை. அங்கே மாற்றலாகி வேலைக்கு வரும் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் இசக்கி கார்வண்ணன். வெள்ளந்தியான கிராம மக்களின் அமைதியை கெடுக்கும் எம் எல் ஏ தம்பி என்று பரபரப்பான திருமுருகனின் திரைக்கதையை அற்புதமாக இயக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.
அமைதிராஜ் என்கிற பெயரில் அதிரடி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்திருக்கும் கார்வண்ணன், அழகு என்கிற பெயரில் கிராமத்து ஆசிரியையாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, சதா தூங்குமூஞ்சியாக இருக்கும் விடியல் பெயர் தாங்கி சுகுமார் என்று கதாபாத்திரங்கள் அட்டகாசப்படுத்துகின்றன.
ஆட்டி, பார்த்து ரசிக்கவேண்டிய அற்புதமான படைப்பு.