மார்கழி திங்கள்

ஆணவ கொலை மனோஜ் version

215

a K.Vijay Anandh review

அன்றாடம் கேள்விப்படும் பயங்கரமான விஷயங்களை விட அமைதியாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் அதிகம் பயமுறுத்தவே செய்கின்றன.

ஸ்லோ பாய்சனாக நடக்கும் ஒரு ஆணவ படுகொலை, ஸ்லோ பாய்சனுக்கே டஃப் கொடுக்கும் பழிவாங்கல் என்று ஒரு சவாலான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நேர்த்தியான படமாக கொடுத்து இயக்குநர் இமயத்திற்கு பெருமை சேர்த்து விடுகிறார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் மனோஜ்,

சமீப காலமாக நடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அழுத்தமான முத்திரை பதித்து விடுகிறார் பாரதிராஜா. பேத்தியின் வழியிலேயே பயணித்து யாரும் எதிர்பாரா விதமாக U டர்ன் அடிக்குமிடம் அதிபயங்கரம்.

பாரதிராஜாவின் பெரும்பாலான கருப்பு தங்கம் போன்று இதிலும் ஒரு கிராமத்து நாயகனாக ஜொலித்திருக்கிறார் ஷியாம் செல்வன். அவர் அப்பாவாக வரும் ஜார்ஜ் விஜயும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட இரண்டு நாயகிகள். கவிதாவாக ரக்ஷனாவும்  ஹேமாவாக நக்ஷா சரனும் தோழியராக வந்தாலும் ஒருவருக்கொருவர் வெவ்வேறு பாணியில் நடித்து அந்தியிருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் , சமுத்திரக்கனி இடத்தை நிரப்பலாம்.

இந்த மார்கழி திங்கள், செம்ம ஹாட்

mysixer rating 3.5/5