ஜிகர்தண்டா XX

mysixer rating 4.5/5

20

a K. Vijay Aanandh review

ஜிகர்தண்டா அதிலும் பயமுறுத்துபவனை விட மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கை வழங்கும் நடிகனை மேலானவன் என்பதாக கலையை குறிப்பாக சினிமா கலையை தூக்கிப் பிடித்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், அதன் பெயருக்கு ஏற்றது போலவே முந்தையதை விட இன்னும் கொஞ்சம் பெரிதாக பிரம்மாண்டமாக சினிமா, பெரும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமல்ல, உண்மையை உரக்கச் சொல்வது என்று உணர்ச்சிகரமாக கதை சொல்லி கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்,

வழக்கம்போல கிருபை என்கிற ரே தாஸ் எனும் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார் SJ சூர்யா. இவனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்து ஒரு கட்டத்தில் எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடிக்கும் கதாபாத்திரம். இறுதியில் அவனது வாரிசை மட்டுமே காப்பாற்ற முடிந்ததே என்கிற திருப்தி.

சமீபகால படங்களில், எஸ் ஜே சூர்யா என்றாலே ஒரு மிரட்டலான நடிப்பை வழங்குபவர் அவர் முன்னால் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று மற்ற நடிகர்கள் நினைக்கும் நிலையில், ராகவா லாரன்ஸ், இதுவரை இல்லாத அளவிற்கு நடித்து ஒரு முழுமையான நடிகராக மாறி இருக்கிறார் இந்த படத்தில், அல்லியஸ் சீசர் என்கிற ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் மிகவும் இயல்பாக பொருந்தி போய் வேறு ஒரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.அவரது வழக்கமான ஸ்டைல் மற்றும் நடனங்களை மிகவும் அழகாக ஆங்காங்கே காட்சிப்படுத்தி ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கவும் தவறவில்லை.

படம் முழுவதும் கர்ப்பிணியாகவே வலம் வரும் நிமிஷா சஜயன், மலையரசியாக ரசிகர்கள் ஒவ்வொருவர் மனதிலும் பதிந்து விடுகிறார்.

யானைகளை வதம் செய்து தந்தங்களை திருடும் செட்டானியாக நடித்திருக்கும் விது முதல் நடிகராக இருந்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவர், அடுத்த முதல்வர் நான்தான் என்று நினைக்கும் இளவரசு,  முதலமைச்சராக நடித்திருப்பவர் என்று ஒவ்வொருவரும் குறிப்பாக அந்த மலை கிராமத்தில் வரும் கண் தெரியாத பாட்டி என்று ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஆடை வடிவமைப்பாளர் சுபேர் பாராட்டத்தக்கவர், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம், குறிப்பாக இறுதி காட்சிகளில்

H. மோனேஷ் இன் VFX வேற லெவல். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பெயருக்கு ஏற்றது போலவே இரட்டை வெற்றி பெறும், முந்தைய ஜிகர்தண்டாவை விட,