சூரகன்

mysixer rating 3/5

224

a K.Vijay Anandh review

கார்த்திகேயன்,  காவல் அதிகாரியாக வரும் இவருக்கு நடந்த ஒரு விபத்தில் பார்வையில் வித்தியாசமான பிரச்சனையாக  தலைகீழ் உருவ குறைபாடு ஏற்படுகிறது. இப்படி ஒரு குறைபாட்டுன்   எதிரிகளை சுடும்போது எதிர்பாராமல் தவறுதலாக ஒரு அப்பாவி பெண்ணை சுட்டு விடுகிறார்,

அடுத்து என்ன  சஸ்பென்ட்  தானே?

அதன்பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற போய் அந்த பெண்ணும் இறந்து விட, இன்னொரு பக்கம் நிழல்கள் ரவியின் பேத்தியும் இறக்க, இப்படி அடுத்தடுத்து இறந்து போகும் பெண்களின்  இறப்புக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை அகற்றுவதுதான் சூரகனின் விறுவிறுப்பான திரைக்கதை.

வித்தியாசமான குறைபாடு விறுவிறுப்பான புலனாய்வு என்று சூரகன் படத்தை அறிமுக இயக்குனர் சதிஷ் கீதா குமார் சிறப்பாக இயக்கியுள்ளார்.

‘சண்டை, நடிப்பு என அனைத்தும் சிறப்பாக செய்துள்ள கார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராக வருவார்.  சுபிக்ஷா கிருஷ்ணன்  வழக்கம்போல வசீகரித்து இருக்கிறார்.

படத்திற்கு படம் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கும் வினோதினி வைதியநாதன், இந்த படத்திலும் நன்றாக நடித்துள்ளார். வின்சன்ட் அசோகன், மன்சூர் அலிகான்,  ஆர் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், மிப்பு சாமி,  தியா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே ரசிகர்களுக்கு நடிப்பு விருந்து அளித்திருக்கிறது.

ஜேசன் வில்லியம்ஸ் & சதீஷ் கீதா குமார் இணைந்து அருமையான  ஒளிப்பதிவை வழங்கி இருக்கிறார்கள். அச்சு ராஜாமணி பாடல் & பின்னணி இசை சிறப்பு. ராம் சுதர்சனின் படத்தொகுப்பு புலனாய்வு திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது.

நறுக்கென்ற வசனங்கள், வித்தியாசமான புலனாய்வு கதைக்களம் என்று ரசிகர்களை திருப்திப்படுத்துவான் இந்த சூரகன்.