JOHN DOE

Rating 3/5

81

a K Vijay Anandh review

சிறுவயதில் தந்தையை வில்லனாகப்பார்ப்பவன் , வாழ்க்கையில் தோற்கவேண்டும் என்கிற அவசியமில்லை, சிறுவயதில் தந்தையை ஹீரோவாகப்பார்ப்பவன் எல்லாரும் ஜெயிக்க வேண்டிய அவசியமுமில்லை!

இதுபோன்ற துப்பறியும் கிரைம் திரைக்கதைகளுக்கு மலையாள இயக்குன்ர்களை அடித்துக்கொள்ள முடியாது என்று சொல்வார்கள், சார் வாங்க இந்தப்படத்தை பாருங்க.,  நம்ம இயக்குனர்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து இருக்கிறார் மதுமிதா.

பெரிய வேலைகள் எதுவும் இல்லாத நிலையில் உடன்பணியாற்றும் மகளிர் காவலருடன் கொஞ்சம் ரொமான்ஸ் செய்யலாம் என்று ஒதுங்கிறார் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, அவரது அவசரம் புரியாமல் ஒரு கார், 8 வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் தண்ணீருக்குள் பாய்கிறது.

அங்கிருந்து, காக்கிச்சட்டைகள் உரசிக்கொள்ள துப்பறியும் தீ பற்றி எரிய ஆரம்பிக்கிறது.

இதுவரை, இவரைத்தான் மற்றவர்கள் தேடுவார்கள் அல்லது போலீஸ் தேடும். இதில், இவர் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு குற்றவாளியை தேடுகிறார், தேடி தமிழகம் வருகிறார்.  குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு முன் , ஜோடியை கண்டு பிடித்துவிடுகிறார், அவரும் காக்கிச்சட்டை.

அர்ஜுன் தாஸ்,  காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு இவர் எப்படி ? என்கிற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும்,  ஆனால், இதிலும் இவர் தனக்கென்று ஒரு தனி பாணி வகுத்து விடுகிறார். உயரதிகாரிகளின் கட்டளைக்கு பயப்படுவதில் இருந்து, தேவைக்காக தனக்கு கீழே பணிபுரிபவர்களிடம் பணிந்து போவது வரை, வித்தியாசமான பாடி லாங்குவேஜ், அசத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

சஞ்சனா நடராஜன், மிடுக்கான காவல்துறை அதிகாரியாக கலக்கியிருக்கிறார்.

ஜாரா வினீத் சந்தோக், மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி ரொம்ப ரொம்ப பெரிது. என்ன ஒரு ஸ்டைலிஷான அடல்ட்! ஸ்டெப் மதருடன் பயணம், தம்பியுடன் நெருக்கம், தமிழ் நாடு போலீஸை லெப்ட்ஹேண்டில் டீல் செய்யும் தெனாவெட்டு என்று ஜமாய்த்திருக்கிறார்.

அவரது அம்மாவாக வரும், ஸ்ரிஷ்டி Y  உம் அவரது தம்பியாக ,  கதையின் மையக்கதாபாத்திரமாக வரும் நீரவ் S உம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பரிதாபங்களை அள்ளும் தம்பதியராக அனுபமா குமார் மற்றும் ஜெயப்பிரகாஷ்.

சிறிது நேரம் திரையில் தோன்றுகிறார், படவா, படம் முழுவதும் காதில் ரீங்காரமிட்டே மகனை படாத பாடு படுத்துகிறார்., படவா கோபி!  ஒரு கடத்தில் அவரது ஆன்மா சாந்தியடைகிறது. அந்த  காட்சியமைப்பு அற்புதம். அர்ச்சனா, அம்மாவாக நிறைவாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் மதுமிதாவின் கண்களாக , ப்ரீத்தா ஜெயராமன் தமிழக – கேரள எல்லைப்பகுதிகளை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கிட்டத்தட்ட இந்தியாவில் பல்வேறு மா நிலங்களுக்கு பயணப்பட்டு ரா மெட்டிரியல்களை கொண்டு வருபவர், பேக்கிங் செய்ய கார்களை மட்டும் உள்ளூரிலேயே வாங்குவதும் , மாட்டிக்கொள்வதும்  அக்யூஸ்டின் குழந்தை தனத்தை காட்டிவிடுகிறது. அவரை கொஞ்சம் மெச்சூர்டாக காட்ட, மதுமித முயன்றிருக்கலாம்.

மற்ற படி, ஜான் டோ, ஒரு நல்ல கிரைம் திரில்லர்!