a K.Vijay Anandh review
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டி போடும் வசீகர நடிகர்கள் வரிசையில் ரஜினிகாந்த் விஜய் – க்கு அடுத்து சந்தேகமே இல்லாமல் சிவகார்த்திகேயன் தான்.
20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் கார்ட்டூன் காட்டு யானை சூப்பர் ஸ்டார் ஆசீர்வதித்துச் செல்லும். அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் அறிமுகக் காட்சியில் நிஜ காட்டு யானை ஆசீர்வதித்து செல்கிறது.
இயற்கையை பாதுகாக்கும் சிவகார்த்திகேயன், பூச்சிக்கொல்லி மருந்துகள் கூட இயற்கையான முறையில் தயாரித்து பயிர்களில் தெளிக்கிறார்.
இன்னொரு பக்கம் இயற்கை பாதுகாக்க, பூமிக்கு வந்து அழிந்தால் ஏற்படும் பிரபஞ்ச சமநிலை பாதிப்பை தடுக்க வேற்று கிரகத்திலிருந்து வரும் அயலான், டாட்டூ. டாட்டுவின் அறிமுகக் காட்சி, எம்ஜிஆரின் அறிமுகக் காட்சி போன இருக்கிறது. ஆம் பூமியில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே ஒரு பெண்ணை காப்பாற்றி விடுகிறது இந்த டாட்டூ.
வேற்று கிரகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உறுதியான ஸ்பார்க் எனும் கல்லின் உதவியுடன் பூமியின் நடு ஆழத்திற்கு துளையிடும் வில்லன்.
இயற்கையை காப்பாற்றும் போரில் சிவகார்த்திகேயனும் டாட்டுவும் இணைகிறார்கள். அதுவே அயலான் படத்தின் மையக்கதை.
காதலுக்கு ரகுல் பிரீத் சிங், காமெடிக்கு கருணாகரன் யோகி பாபு என்று ஒரு ஜனரஞ்சகமான காம்பினேஷனுடன் வேற்று கிரக அயலானையும் இணைத்து ஒரு சமூக சயின்டிஃபிக் ஃபிக்சன் ஆக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் ரவிக்குமார்,
தமிழில் ஏன் இந்திய சினிமாவில் முதல்முறையாக இப்படி ஒரு கிராபிக்ஸ் காட்சிகளுடன் படத்தை எடுத்திருக்கும் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
அயலானுக்கு உருவம் கொடுத்த நடிகரையே குரலும் கொடுக்க வைத்திருக்கலாம். ஏனென்றால் அவர் கதாநாயகனாக நடித்த மதிமாறன் எனும் படத்தில் அவர்கள் சொந்த குரல் கணீர் குரலாகவே ஒளித்திருந்தது.
அயலான் சக்தியின் உதவியுடன் கண்காட்சியில் குழந்தைகளை காப்பாற்றும் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தமிழுக்கு மிகவும் புதிது.
சர்வதேச தரத்திலான ஒரு படைப்பை கொடுக்கும் பொழுது தான் பின்பற்றும் மிகக் குறுகிய சித்தாந்தங்களை தவிர்த்து விசாலமாக யோசித்து இருந்திருக்க வேண்டும் இயக்குனர். யானை வழித்தடத்தில் சிலைகள் யார் வைத்திருக்கிறார் என்பதனை தைரியமாக சொல்லி இருக்கலாம்! அல்லது யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து பல்கலைக்கழகம் கட்டியிருப்பது யார் என்பதை இன்னும் கொஞ்சம் தைரியமாக சொல்லி இருக்கலாம்! பூமியில் துளையிடும் நிறுவனத்தின் பெயருக்கு குறிப்பாக தமிழகத்தில் இயற்கையை அழிக்க கிளம்பி இருக்கும் நிறுவனத்திற்கு பெயர் படத்தில் ஆர்யன், நிஜத்தில் அந்த வேலையை செய்து கொண்டிருப்பது கம்யூனிச சித்தாந்த சீனன், என்பது உலகிற்கே தெரியும், அதனைச் சொல்லி இருக்கலாம்! தமிழ் சிறந்த மொழி தான், நமது தாய்மொழி தான் இந்த படம் பிற மொழிகளில் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த மொழியை போற்றும் பாடலில் ஒலிக்கும் மொழி எது?
நிஜ சிவகார்த்திகேயன், CG அயலான் இணை ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்க தான் செய்கிறது.