டெவில்

mysixer rating 4.5/5

212

a K.Vijay Anandh review

ஒரு நேர்த்தியான சினிமா என்கிற வகையில் இந்த வார வெளியீடுகளில் ஒரு படி முன்னேறி நிற்கின்றது ஆதித்யா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த டெவில் .

சில வருடங்களுக்கு முன் அண்ணன் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படத்தில், பிசாசு தனியாக ஒரு கதாபாத்திரமாகவே வரும். இந்தப் படத்தை பொறுத்தவரை டெவில் என்பது தனியான ஒரு கதாபாத்திரம் அல்ல. அது நம் ஒவ்வொருவர் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களே அல்லது நமது நிலை தடுமாறச் செய்யும் எண்ணங்களே என்பதாக காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமை. இன்னொரு கோணத்தில் சொல்வதாக இருந்தால் நடிப்பு ராட்சசி என்று சொல்வோமே அந்த அர்த்தத்தில் சொல்வதாக இருந்தால் இந்த படத்தில் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணாவை நடிப்பு டெவில் என்று அழைத்தால் மிகையல்ல.

விதார்த் தன்னை பெண் பார்க்க வரும் காட்சி முதல்,  முதலிரவு அன்றிலிருந்து தான் ஏமாந்தப்பட்டிருப்பதை உணர்ந்து வெடிக்கும் காட்சிகள், துணிந்து இன்னொரு இணை தேட தொடங்கும் காட்சிகள்,  திருத்திய கணவனை அரவணைக்கும் காட்சிகள் என்று மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

விதார்த், வழக்கப்போல கொடுத்த பாத்திரத்தில் பொருந்திப் போகும் தண்ணீராக சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரோஷனாக வரும் திரிகுன், தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நல்வரவு.

இப்படி ஒரு வாய்ப்பு 800 கோடி பேருக்கும் கிடைததால்  முன்னும் பின்னுமான பூமிப்பந்தின் சுழற்சியால் இந்த பிரபஞ்சமே வெடித்து சிதறிவிட நேரிடும்.

பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் மிஷ்கின். பாடல்களுக்கான இசையும் சரி பின்னணி இசையும் சரி மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

திருத்த முடியாத கடந்த காலத்தை நிரந்தரமாக கடந்து விட்டு நிகழ்காலத்தை இனிமையாக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவ முயன்று வாழ்வோம். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஹேமாவிற்கு கிடைத்தது போன்ற ஒரு வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

டெவில், ஒரு நேர்த்தியான சினிமா .