பாம்பாட்டம்

mysixer rating 4/5

77

a K.Vijay Anandh review

அப்பாவும் மகனுமாக ஜீவன் பிரமாண்டமான அரண்மனை அந்த அரண்மனை புதையலை பிரம்மாண்டமான பாம்புடன் காவல் காக்கும் மல்லிகா ஷெராவத் என்று ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது பாம்பாட்டம் படத்தில்.

சுதந்திர போராட்ட கால இந்தியாவில் கதை ஆரம்பித்து, சுதந்திர இந்தியாவில் கதை முடிவது போல காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அந்த திரைக்கதை புக்திக்கு பாராட்டுக்கள்.

மங்கம்மா தேவியாக மல்லிகா ஷெராவத்தும்.  ஜீவனின் காதலியாக வரும் ரித்திகா சென் மற்றும் இளவரசியாக வரும் சாய்பிரியா சரவணன் ரமேஷ் கண்ணா மற்றும் அப்பா ஜீவனின் நண்பனாக வரும் சுமன் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

படத்தின் முக்கிய வில்லனாக வரும் காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரமான காளி வேடத்தில் நடித்திருப்பவரை எங்கிருந்து இறக்குமதி செய்தார்கள் என்கிற அளவிற்கு நடித்திருந்தார்: சிறந்த நடிகர்களை உருவாக்கும் மலையாள திரையுலையில் இருந்தா அல்லது வித்தியாசமான வில்லன்களை உருவாக்கும் தெலுங்கு & கண்டை  திரையுலகில் இருந்தா அல்லது மிரட்டல் வில்லன்களை உருவாக்கும் ஹிந்தி திரையுலகில இருந்தா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வித்தியாசமான தோற்றம் மற்றும் வித்தியாசமான உடல் மொழியில் அசத்தி இருக்கும் அந்த வில்லன், அட இந்தப் படத்தை இயக்கி இருக்கும் வடிவுடையான் என்று தெரிய வரும் போது நிச்சயம் ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன.

என்னதான் ஜோதிடம் மாந்திரீகம் என்று ஆரம்பித்தாலும் காட்டி இருக்கும் அந்த பிரமாண்டமான பாம்பு கிராபிக்ஸ் காட்சிகள் உருவானது என்கிற சிந்தனை தோன்றாமல் அது நிஜமான பாம்பு என்கிற தோற்றத்தை உருவாக்கும் விதமான கிளைமாக்ஸ் புத்திசாலித்தனமாக அமைந்திருக்கிறது.

இது போன்ற படங்கள்தமிழுக்கு வெளியில் இருந்து வேறு இயக்குனர்களால் இயக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகி இருந்தால் நிச்சயம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்கிற அளவிற்கு பேசப்படும் ஆனால் நம் மண்ணைச் சேர்ந்த வடிவுடையான் தமிழ் ரசிகர்களுக்காக பிரமாண்டமாக யோசித்து அவர்களை மட்டுமே நம்பி இந்த படத்தை தமிழிலேயே எடுத்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது.

பாம்பாட்டம்,  இது நம் ஆட்டம், கொண்டாடுவோம்!