அரிமாபட்டி சக்திவேல்

Rating 5/5

1,326

a K.Vijay Anandh review

வேறு ஜாதி ஆண்களையோ பெண்களையோ மணமக்களாக ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று வறட்டு பிடிவாதம் பிடித்து வாழும் கிராமம்,  அரிமாபட்டி.

ஊர் கட்டுப்பாடு கடினமாக இருந்தாலும் அதனால் காதலுக்கு கட்டுப்பட்டு விட முடியுமா என்ன?  ஒவ்வொரு தலைமுறையிலும் காதல் வயப்படுபவர்கள் வருகிறார்கள், கிராமத்து மூர்க்கத்தனங்களுக்கு பலியாகிறார்கள், தப்பி பிழைத்தவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கள் கரம் பிடித்து காதலி அல்லது காதலனுடன் ஊரையும் உறவினர்களையும் தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காதலின் குதூகலத்தையும் கொண்டாட்டங்களையும் சொல்லும் படங்கள் ஏராளம். ஆனால் ஒரு காதலுக்கு பிறகான கடினமான வாழ்வியல் சூழல்களை விவரிக்கும் படமாகவும் , காதலுக்காக தங்கள் கிராமத்தை தியாகம் செய்து வாழும் நிஜமான காதலர்களை அடையாளப்படுத்தும் படமாகவும் அரிமாபட்டி சக்திவேல் வெளியாகி இருக்கிறது.

குழந்தைவேலுவாக சார்லி ஒரு வளர்ந்த மகனின் தந்தையாக இருந்தாலும் வெள்ளந்தியான அப்பாவாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அவரது அப்பா அவரது தாத்தா மகன் என்று நான்கு தலைமுறையாக வாழும் அழகான ஒரு குடும்பத்தை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குனர் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். குறிப்பாக நாயகன் சக்திவேலுக்கும் அப்பாவிற்குமான உறவு, நாயகன் சக்திவேலுக்கும் தம்பிக்கு மாண உறவு, பாட்டன்  பேரன்  உறவு  பெரிய குடும்பம் ஆகிய அழகான காட்சியமைப்புகளால் இந்த படத்தின் மேக்கிங் குறைகள்  மறைந்து போகின்றன. ஒரு கட்டத்தில் தந்தையே மகனை விட்டுக் கொடுத்து விட்டாலும் எந்த சூழ்நிலையிலும்  அண்ணனை  விட்டுக் கொடுக்காதே தம்பி கதாபாத்திரம்  கவனிக்க வைத்திருக்கின்றது. சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவன், சிறப்பாக நடித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் நாயகி கவிதாவாக  நடித்திருக்கும்  மேகனா ,  வர்க்க பெண்ணின் கதாபாத்திரத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். உறவுகளுக்கு இடையில் நடக்கும் சச்சரவுகளால் அந்த வீட்டு குழந்தைக்கி அந்த வீட்டு குழந்தைக்கு அத்தை என்கிற உறவு அத்து போவதாக காட்டும் அந்த ஒரு காட்சி கண்கலங்க வைக்கின்றது.

தமிழகம் சமூக நீதி மண் சாதிகளை ஒழித்த மண் என்று ஒரு பக்கம் வெற்று அரசியல்வாதிகள் வெற்றி கூச்சலிட்டு கொண்டிருந்தாலும், 21 ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு கிராமம் இருப்பது அவர்களுக்கு தெரியாதா? அல்லது சாதிய ஓட்டு வங்கிக்காக நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்களா ? வெட்கக்கேடு !

சமுதாய விழிப்புணர்வு கொடுத்திருக்கும் இதுபோன்ற படங்களுக்கு மேக்கிங் குறைபாடுகள் கடந்து ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்த படம் 100 நாள் ஓடுவதை விட அப்படி காதலுக்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பவர்கள் வெவ்வேறு ஊர்களில் உறவுகள் இன்றி அனாதையாக வாழ்பவர்கள் அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு சென்று அவர்கள் உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழிவகை ஏற்படுத்தினால் அதுவே இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றி. இந்த திரைப்படத்திற்கு மட்டுமல்ல மானுட சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும்!

அப்படி ஒன்று நடந்து விடாதா என்று கதை திரைக்கதை எழுதி இருக்கும் பவனும் இப்படத்தை இயக்கியிருக்கும்  ரமேஷ் கந்தசாமியின், பணத்தை முதலீடு செய்து தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்கள் பவன் மற்றும் அஜிஷும்  என்று விரும்பியே இந்த படத்தை ரசிகர்கள் மன்றத்தில் மேடை ஏற்றி இருக்கிறார்கள். அவர்களது ஆத்மார்த்தமான விருப்பங்கள் நிறைவேற முயற்சி செய்வோம்!