a K.Vijay Anandh review
இந்தக் கதையை எப்படி யோசித்து இருப்பார்கள் இதற்கு எப்படி திறக்க எழுதி இருப்பார்கள் இதனை படமாக்கி நான் லீனியர் எடிட்டிங் முறையில் எப்படி இவ்வளவு அழகாக கோர்த்து இருக்கிறார்கள் என்று யோசிக்கும் பொழுது நிஜமாகவே பிரமிப்பாக இருக்கிறது.
தேவதாசி முறை, மனித மூளையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சி. தீர்வை தேடிய ஒரு பயணம் – ஒளி உமிழும் காளான் தேடி அந்த பயணம் என்று காட்சிக்கு காட்சி மிரள வைத்திருக்கிறார்கள்.
ஆந்திர பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தேவதாசி ஆன அபிநயா சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது மகள் உமாவாக நடித்திருக்கும் ஹரிக்கா பேடா போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அவரை தேவதாசி ஆக்க அந்த கிராமத்தினர் முயலும் போது அவர் துடிக்கும் துடிப்பு மிகவும் யதார்த்தமாக நம்மளை பயமுறுத்துகிறது.
சங்கராக நடித்திருக்கும் விஸ்வக் சென், யாராவது தொட்டாலே அவரது உடல் எரியும் என்கிற அளவிற்கு ஒரு உபாதையுடன் அதற்கான தீர்வை மருந்தை தேடி கும்பமேளா காசி இமயம் என்று பயணிக்கிறார். இறுதிவரை இறுக்கமான முகத்தோடு வித்தியாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார் வழங்கியிருக்கிறார்
அவருடன் இடையில் இணைந்து கொள்ளும் ஆராய்ச்சி மருத்துவர் ஜான்வியாக நடித்திருக்கும் சாந்தினி சவுத்ரியும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இருவரும் இணைந்து பணிச்சிகரங்களில் செய்யும் சாகசங்கள் அற்புதம்.
இன்னொரு பக்கம் அப்பாவிகளை சிறை பிடித்து அவர்களது மூளையை கட்டுப்படுத்தும் கொடூரமான ஒரு ஆராய்ச்சியை செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி கூடம். படம் பார்க்கும் ரசிகர்களையும் பயமுறுத்துவது நிச்சயம்.
இறுதிக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது, உண்மைகள் வெளியாகும் பொழுது அடடா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கி இருக்கும் வித்யாதர் காஜிடா, அற்புதமாக எடிட்டிங் செய்திருக்கும் ராகவேந்திரா திருன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
காமி, வியக்க வைக்கிறது!