இடி மின்னல் காதல்

mysixer rating 3.5/5

36

a K.Vijay Anandh review

நள்ளிரவில் அடர் மழையில் சென்னையில் ஒரு கார் விபத்து,  அதில் பறிபோகும் தந்தை தந்தையை இழந்து தவிக்கும் மகன் மனசாட்சிக்கு பயந்து தவிக்கும் கதாநாயகன் சிபி,  அவனை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து தனது காதலில் ஜெயிக்கத் துடிக்கும் நாயகி பாவ்பா ,  ஒரு சிவப்பு விளக்கு பகுதி தங்களுக்கும் உணர்ச்சி இருக்கின்றது பாசம் இருக்கின்றது என்று காட்டும் பாலியல் தொழிலாளர்,  சிறுவர்களின் மீது பாலியல் இச்சைக்கு அடிமையாக இருக்கும் வில்லன்,  அவனுக்கு வலது கரமாக இருக்கும் பாஸ்டர்,  நண்பனுக்கு அடைக்கலம் தரும் மெக்கானிக் ஜெகன், இன்னொரு பக்கம் ஆதரவற்ற சிறுவர்களுக்கு தாயாக விளங்கும் பாஸ்டர் ராதாரவி , ஒரு நேர்மையான நடுத்தரவருக்கு காவல்துறை அதிகாரி பாலாஜி சக்திவேல் என்று இவர்களுக்கு இடையே நடக்கும் மிகவும் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் விறுவிறுப்பான படம் தான் இடி மின்னல் காதல்.

இளம் உளவியல் மருத்துவராக வரும் சிபிக்கு  இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்திருக்கிறது எனலாம். அழகும் இளமையும் அத்துடன் ஒரு முயற்சியான நடிப்பு திறமையும் சேர்ந்த ஒரு இளம் கதாநாயகனாக வசீகரிக்கிறார். குற்ற உணர்ச்சியில் நொறுங்கிப் போவதும் – உண்மை தெரிந்த நிலையிலும் அந்த சிறுவனுக்கு ஆதரவாக இருப்பதுமாக எல்லா காட்சிகளையும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பாவ்யா, சமீபத்தில் இவர் நடித்திருக்கும் அத்தனை படங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்திலும் முதலில் ஒரு சுயநலவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் இறுதி காட்சியில் அவருக்குள்ளும் ஒரு தாய்மை இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் இடங்கள் அருமை.

தந்தையை இழந்து தவிக்கும் சிறுவனும், பெரிய குடும்பத்தில் பிறந்து வியாபாரத்தில் நுழைந்து போகும் தந்தையும், குடும்பத்தை இழந்து தனிமரமாக நிற்கும் அவருக்கு ஆறுதலாக இருக்கும் பாலியல் தொழிலாளியும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள்.படத்தின் மைய திரைக்கதைகளை பார்க்கும் பொழுது வெளிநாட்டு படங்கள் பார்த்தது போன்று ஒரு பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

பெண்களின் மீது பாலியல் வன்கொடுமை காட்டும் வில்லன்களை பார்த்திருக்கிறோம், ஆண் சிறுவர்கள் மீது காம இச்சை கொண்ட வில்லன், சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

ராதாரவி , பாலாஜி சக்திவேல், ஜெகன் என்று படத்தில் நேர்மறையான துணை கதாபாத்திரங்கள் இருப்பது ஆச்சரியப்பட இருக்கின்றது, எதிர்மறை கதாபாத்திரங்களிலேயே பார்த்து பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் இவர்கள் புது அனுபவத்தை கொடுக்கிறார்கள்.

கார் மெக்கானிக் செட்டில் போட்டிருக்கும் ஒரு அண்டர் கிரவுண்ட் செட் அருமை, டைரக்டர் பி பாலசுப்ரமணியன் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நடக்கும் மிக முக்கியமான கிளைமாக்ஸ் காட்சிகள் அந்த அண்டர் கிரவுண்டில் தான் நடக்கின்றது. அதற்கு அந்த செட் மிகவும் சுவாரசியத்தை கொடுத்திருக்கின்றது.

இடி மின்னல் காதல் ஐ காதல் தந்தை மகன் பாசம்  ஆகியவற்றை இணைத்து ஒரு விறுவிறுப்பான  கிரைம் திரில்லர் ஆக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மாதவன்.