a K Vijay Anandh review
வாட்ச்மேனாக வரும் காட்சிகளிலெல்லாம் சிரிக்கவைத்து தனது பயணத்தை திருப்தியாக நிறைவு செய்திருக்கிறார் சேஷு.
மா, பலா, வாழை என்று முக்கனிகளின் சுவைபோல மூன்று பகுதிகளாக நகைச்சுவை விருந்து படைத்திருக்கின்றனர்.
25 லட்சம் கடனுடன் இருக்கும் சந்தானத்தின் பெண் தேடும் படலத்தில் ஆரம்பித்து ஜமீன் பெண்ணை திருமணம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பும் வரை ஒரு காமெடி விருந்து.
சென்னையில் சந்தானம் வீடு அலுவலகம் என்று ஒரு விவேக் பிரசன்னா கொல்லப்பட்டு அவரை பாடி பலராம் முனீஷ்காந்திடம் ஒப்படைக்கும் வரை ஒரு காமெடி விருந்து.
வீட்டிற்கு திரும்பி வந்தால் உயிரோடு இருக்கும் விவேக் பிரசன்னா அதிலிருந்து தீவிரவாத வேட்டை என்று ஒரு ஆக்ஷன் கலந்த காமெடி விருந்து, படம் முழுவதும் ரொமான்ஸ் செய்ய நேரமில்லாமல் அல்லது மனதொத்து போகாமல், வேனில் கிடைக்கும் கேப்பில் சந்தானத்திற்கும் பிரியலயாவிற்குமான காதல் துளிர்விட்டு ஒரு முத்தப்பரிமாற்றமும் இங்கே தான் நடக்கினறது.
இப்படி மூன்று பகுதிகளாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித சுவையாக காமெடி விருந்து படைத்திருக்கிறார்கள் எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தனும் இயக்குநர் ஆனந்த் நாரயணும் சேர்ந்து.
சந்தனம் மணக்காமல் இருக்காது, அதைப்போலத்தான் சந்தானமும். புதிய புதிய கான்செப்ட்டுகளுக்காக லொள்ளு சபா முதல் இன்று வரை கடினாக உழைப்பது அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மற்றும் அவர் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களில் படத்திற்கு படம் நிரூபணமாகிவருகிறது.
கடன்கார ஜமீனாக தம்பிராமையா, அதான் நில உச்சவரம்பு அது இது என்று ஜமீன் தார்களின் வாழ்வாதாரத்தை சுதந்திர இந்திய ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டார்களே. 1200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை கொள்ளையடிக்க வந்த இந்திய கலாச்சாரங்களை அழிக்க வந்த மொகலாயனின் வாரிசான ஹூமாயூன் தங்கிச் சென்றதாக நம்பப்படும் சென்னை கடற்கரையில் அமைந்த மாளிகையை போட்டிக்கொண்டு இரு திராவிட அரசுகளும் பல கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து புணரமைக்கின்றன. அதே நேரம், இந்திய கலாச்சாரங்களையும் ஆலயங்களையும் பராமாரித்து பத்திரமாக இன்றைய தலைமுறை கொண்டுவந்த நமது ஜமீன்களின் பிரமாண்டமான வீடுகளுக்கு வெள்ளையடிக்க கூட அரசு நிதி ஒதுக்குவதில்லை.
அப்படிப்பட்ட நிலையில் இன்று பல ஜமீன்களின் நிலையும் இந்த படத்தில் வரும் ஜமீனைப்போன்றது தான். முதிர்கன்னிகளை வைத்துக்கொண்டு திருமணம் கூட செய்துவைக்க இயலாத நிலையில் தான் இன்றும் பல ஜமீன்கள் இந்தியாமுழுவதும் இருக்கிறார்கள். அந்த வகையில், இதனை ஒரு மையக்கருவாக வைத்து சிந்தித்த விதத்தில் எழுச்சூர் அரவிந்தன் மற்றும் இயக்கு நர் ஆனந்த் நாரயணுக்கு பாராட்டுகள்.
தம்பிராமையா, கையில காசு இலலன்னாலும் ஜமீன் வழக்கத்தை விடமுடியாமல் யாரு காசிலாவது வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நூறு பேருக்கு அன்னதானம் செய்யும் அந்த அப்பாவித்தனம் முதல் அத்தனையும் அழகு.
பால சரவணன், அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு தனது வழக்கமான காமெடி கலாட்டாக்களை கச்சிதமாக செய்திருக்கிறார்.
முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா ஆகியோரெல்லாம் கேட்கவா வேண்டும், போதாக்குறைக்கு மாறன் என்று அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சந்தானம் முதல் சேஷு வரை நகைச்சுவை காட்சிகளில் பட்டையை கிளப்புவது என்பது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம் தான். ஆனால், இந்த காமெடி சுனாமிக்கு மத்தியில், கொஞ்சம் பிசகினாலும் காணாமல் போய்விடும் அளவிற்கான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அறிமுகாகி ஒரு நகைச்சசுவை சிற்றலையாக மென்மையாக வருடிச்செல்கிறார் பிரியாலயா.
இமானின் இசையில் வரும் பாடல்களில் மட்டுமே காதல் காட்சிகள் படம்பிடிக்கப்பிட்டிருப்பது சுவராஸ்யமான விஷயம்.
முதலிலேயே குறிப்பிட்டது போல, முக்கனிகளும் சுவை மிக்கவை என்றாலும் , தனித்தனியாக ( லீனியர் ) பரிமாறியிருக்காமல் கலவையாக கொடுத்திருந்தால் ( நான் லீனியர் ) இங்கு நான் தான் கிங், நான் தான் ( வசூல் ) சக்ரவர்த்தி என்று மாறியிருக்கலாம் !
அறிமுக தயாரிப்பாளராக சுஸ்மிதா அன்புசெழியன் வெற்றிகரமாக தனது கணக்கை துவங்கியிருக்கிறார்!