வீராயி மக்கள்

mysixer rating 5/5

205

a K Vijay Anandh review

வீராயி மக்கள் , இன்றைய தலைமுறை எதை தொலைத்துக்கொண்டு இருக்கிறதோ அதை சரியாக நினைவு படுத்தி, ஒரு எச்சரிக்கை மணி அடித்திருப்பது போன்ற படமாக இப்படம் வெளியாகியிருக்கிறது. மூத்த தலைமுறையால் சேர்ந்து இருக்கும் ஒரு குடும்பம், அதன் இழப்பிற்கு பின் சிதறுண்டு போன குடும்பம் இன்றைய தலைமுறைக்காக இணைந்தே ஆகவேண்டும். ஒரு அழகான குடும்பம் சிதைந்து பின் முன்பை விட அதிக வீரியத்துடன் இணைந்து கொள்வதை அற்புதமான திரைக்கதையாக அமைத்து மிக மிக அற்புதமாக காட்சிப்படுத்தவும் செய்திருக்கிறார் இயக்குநர் நாகராஜ் கருப்பையா.

மூத்தவராக வேல ராமூர்த்தி, இவரை விடடால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேறு யாரும் இல்லை என்று உறுதி யாக கூறும் அளவிற்கு மிகசிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கம்பீர நடையும் அழுத்தமான பார்வைகளும் கரடு முரடான வார்த்தைகளுக்குள் இழைந்ததோடும் பாச நேசங்களும் அருமை. அவரது மனைவியாக நடித்திருக்கும் ரமா , கேட்கவே வேண்டாம் , வாழ்ந்திருக்கிறார்.

மாரிமுத்து அவரது மனைவியாக வரும் செந்தில் குமாரி கச்சித்தமான தேர்வு, குறிப்பாக செந்தில் குமாரி , சண்டை போடும் போதும் சரி சமரசம் செய்து கொள்வதிலும் சரி 100% மாறிவிடுகிறார்.

தீபா சங்கர் , வராது வந்த மாமணி போல, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.

சுரேஷ் நந்தா , நந்தனா ஜோடி கண்ணியமான ஒரு காதலை இன்றைய தலைமுறைக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது.

குடும்பத்திற்குள் இருக்கவேண்டும் என்பதில்லை , கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் சக குடும்பத்தினரே என்பது போன்ற காட்சிகள் நகர வாசிகளுக்கு புதுமையான அனுபவம் தரும். வீராயி மக்கள் ஒன்று சேரனும் என்று அடிக்கடி வந்து செல்லும் / சொல்லும் பாட்டி ஒரு உதாரணம்.

தீபன் சக்ரவர்த்தியின் இசை சீனிவாசனின் ஒளிப்பதிவு ஆகியவை வீராயி மக்கள் படத்திற்கு மிகவும் வலு சேர்த்திருக்கின்றன.

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படைப்பு வீராயி மக்கள் !