a K. Vijay Anandh review
” தண்ணிக்கு பிறமாநிலத்திடம் கைஏந்துகிற தமிழ் நாட்டுபெண்கள் ( தாய்மை அடைய வேண்டி )
நாளைக்கு ஆண்மைக்கும் வேற மாநிலத்திடம் கையேந்தி நிற்கும் நிலை வரப்போகுது ” – தமிழர்களின் நெஞ்சை பதற வைத்திருக்கும் சாலா பட வசனம் !
படத்தின் மையப்புள்ளியே சாராயமும் , டாஸ்மாக்கும் , கள்ளசாராய மற்றும் பார் எடுப்பதில் உள்ள அரசியலும் தான்.
குடியால் , குடிக்கெட்டு போனது மட்டுமல்லாமல் ஆண்மையையும் இழந்து நிற்கும் தமிழ் இளைஞர்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள் . சாராய மாடல் என்று சொல்லத்தக்க மதுவின் வருமானத்தையே பெரிதும் நம்பி ஆட்சி செய்யும் திராவிட மாடல் தமிழ் நாட்டில் இப்படி ஒரு தைரியமான படமாக வெளிவந்திருக்கிறது சாலா.
டாஸ்மாக்கில் ஒரு நாள் வருமானம் 15 கோடியில் ஆரம்பித்து ஆண்டு வருமானம் 40 ஆயிரம் கோடிக்கு மேலாக புரள்வதை , சரக்கு அடித்து விட்டு ஆண்கள் சாலையில் புரள்வதை , பட்டினியால் அவனது மனைவியும் , பிள்ளைகளும் வீட்டில் புரள்வதை படம் முழுவதும் செருப்பால் அடிக்காத குறையாக சொல்கிறார்கள்.
இது கதா நாயகன் படமா கதா நாயகி படமா என்று பட்டிமன்றம் வைத்தால் , கதா நாயகி படம் தான் என்று சாலமன் பாப்பையாவே தீர்ப்பு கூறிவிடுவார். அந்தளவுக்கு , எவ்வளவு அடக்கு முறைகள் வந்தாலும் டாஸ்மாக்கையும் டாஸ்மாக் பார் நடத்துபவர்களையும் எதிர்த்து நிற்கும் புனிதாவாக ரேஷ்மா வெங்கடேஷ். ஒரு சாதாரண நூல் புடவை சகிதம் மாணவர்களுடன் வந்து போராடும் ஒவ்வொரு காட்சியிலும் தேவதையாக ஜொலிக்கிறார்.
ரசிகர்களுக்கு மட்டுமல்ல , தன்னையே எதிர்த்து போராடுகிறார் என்று தெரிந்தும் அவர் மீது காதலில் விழுகிறாரே சாலா, தீரன் அவருக்கும் தான். சாலாவாக வரும் தீரன் ஆறடி உயர ஆர்யாவாக அடித்து ஆடியிருக்கிறார். படத்தில் அவருக்கு வில்லனாக வருபவர்களை , ஏனென்றால் அவருக்கே ஒரு நெகட்டிவ் ரோல் தான். ஒரு கட்டத்தில் தான் குழந்தை பருவத்தில் இழந்த கல்வியை கதாநாயகியுடன் வரும் ஆதரவற்ற குழந்தைகளும் இழந்து விடைக்கூடாது என்று நினைத்து அவர்களுக்கு உதவ ஆரம்பிப்பதிலிருந்து – கோர விபத்தில் அவர்களனைவரையும் பறிகொடுத்து நிற்கும் காட்சி வரை என்று சிறப்பாக நடித்திருக்கிறார் .
நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சாலா படத்திற்கு நன்றாகவே கைகொடுத்து இருக்கிறது . அருள்தாஸ், சார்லஸ் வினோத் , சம்பத் ராம் என்று தங்களது கதாபாத்திரங்களில் அடடாகாசமாக பொருந்தி போயிருக்கிறார்கள்.
டாஸ்மாக்கிலேயே டூப்ளிகேட் சரக்கு ஓட்ட , அதிபயங்கர மெத்தனால் கலந்து கள்ளத்தனமாக சரக்கு தயாரிக்கப்படுவதை இவ்வளவு விளக்கமாக யாரும் காட்ச்சிப்படுத்திவிட முடியாது. அதனை எதேச்சையாக படம் பிடிக்கும் 3 சிறுவர்களும் கொல்லப்படும் காட்சிகள் கர்ணகொடூரம் . இந்த மாதிரி படங்களையும் பார்த்துவிட்டு ஒருத்தன் திருந்தலைன்னா, கெளதம் மேனன் ஸ்டைல்ல சொல்றதா இருந்தா …த்தா … அவனை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது .
வெற்றி மாறன் படங்களில் வழக்கமாக காணப்படும் வட சென்னை அரசியல் பழிவாங்கல் கதைக்களம் தான், ஆனால் , புனிதா டீச்சர் மற்றும் மாணவர்கள் என்று வித்தியாசப்பட்டு நிற்பதுடன் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மணிப்பால். SD MANIPAUL.
சாலா , டாஸ்மாக் வருமானத்தையே பிரதானமாக நம்பி அப்பாவி மக்களின் & தமிழ்க்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் தமிழக ஆட்சியாளர்கள் வயிற்றில் புளியை கரைக்க வந்திருக்கும் இன்னொரு அண்ணாமலை !