கர

Rating 4/5

22

a K Vijay Anandh review

திருவெறும்பூர்ல ரெண்டு நாள், ஆந்திராவில் ரெண்டு நாள் , சொந்த ஊரான இராமநாதபுரம் மாவடடம் கிளியூர் இல் 8 நாள் ஆக மொத்தம் 12 நாளில் , கராசாமியின் வாழ்க்கையில் நடக்கும் கதைதான் கர. தனுஷைத்தவிர முக்கியமான நடிகர்கள் என்றால் ஏழே பேர் தான். அதில் , தேவர் மகன் சிவாஜியை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கே எஸ் ரவிக்குமாருக்கு , மனிதர் துணை நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு கே எஸ் ரவிக்குமார் என்கிற அடையாளமே தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். அவருக்கு அடுத்து துணை நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஜெயராம் , கருணாஸ் , பிரிதிவி ராஜன், சுராஜ் வெஞ்சாரமூடு , ஸ்ரீஜா ரவி என்று அனைவருக்குமே மிகவும் சமமான வாய்ப்பு அவரவர் கதாபாத்திரங்களில் மிகசிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கவர்ச்சி மற்றும் அழகின் உச்சம் என்று சொல்லத்தக்க நாயகி மமீதா பைஜூ இந்தப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு , மிகவும் சாதாரண நாம் அன்றாடம் பார்க்கும் ஏழ்மையான இளம் மனைவியாகட்டகாசமாக நடித்திருக்கிறார்.

தனுஷ் , கேட்கவே வேண்டாம் , இதில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம், அவருக்கு அல்வா சாப்பிடுவது போல , மிகவும் எளிமையான கதாபாத்திரம். ஆனால், அந்த எளிமையான கதாபாத்திரத்தில் , அதன் தன்மை கெட்டுவிடாதபடி எப்படி மாஸாக நடிக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து பிறர் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு , மிகசிறப்பாக நடித்திருக்கிறார்.

வேற என்ன செய்றது ? பூட்டை உடைக்கவும் ஓடடைப்பிரிக்கவும் தான் எனக்கு தெரியும் ..” என்று கருணாஸிடம் ஆக்ரோஷமாக பேசும் அந்த ஒருகாட்சி , தனுஷின் நடிப்புக்கு ஒரு சோற்றுப்பதம்.

16 வயதில் சொந்தமாக தொழில் தொடங்க பணம் கேடடால் மறுக்கும் தந்தை , விளைவு திருடனாக ஆகும் மகன், சுயநலத்திற்காக திருடிக்கொண்டிருந்தவன் , ஒரே ஒரு திருட்டோடு முடித்துக்கொள்ளலாம் என்றால் போலீசிடம் மாட்டிக்கொள்கிறான். சரி அத்தோடு திருட்டுக்கு ஒரு முழுக்கு போட்டுவிடலாம் என்று பார்த்தால், தந்தையை நல்லடக்கம் செய்வதற்காகவும் , தந்தை சொன்னதை கேட்டு வாங்கி கடன் பெற்று நிலத்தை மீட்க முடியாமல் தவிக்கும் கிராமத்தார்க்காகவும் , கடைசியாக திருடி , அனைத்திலும் ஜெயிக்கிறான்.

1990 இல் திருவெறும்பூர் காங்கிரஸ் ஏம் எல் வீட்டில் அவ்வளவு பணம் மற்றும் நகைகள். தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ்காரன் வீட்டுலயே இவ்வளவு என்றால் , ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளின் எம் எல் வீடுகளில் புகுந்திருந்தால் எவ்வளவு இருந்திருக்கும் என்று முதல் காட்சியிலேயே ஒரு சுவராஸ்யத்தை விதைத்து விடுகிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

1991 இல் நடந்த வளைகுடா போரினால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு , வங்கி லோனில் வாங்கிய டிராக்டர்களை ஓட்டமுடியாத நிலைமை , இராமநாதபுரம் வறட்சி , அதே காலகட்டத்தில் , இராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனுர் பகுதிகளில் நடைபெற்ற தேவர் மகன் சூட்டிங் என்று பல நிஜ சம்பவங்களை திரைக்கதைக்குள் புகுத்தி , படத்தின் கதைக்கு ஒரு உயிர் கொடுத்து , நாம் நேரலையில் பார்த்து ரசிப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கும் விதத்தில் கதைழுதிய ஆல்பிரட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா , அதன் உயிர்த்தன்மை சிதைந்து விடாமல் இயக்கிய விக்னேஷ் ராஜா ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும்கும்.

இன்றைய ஈரான்அமெரிக்க போர் கதையை , 2026 இல் நடப்பது போன்ற உணர்வையும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கர, முன்பே குறிப்பிட்டது போல தனுஷின் 12 நாள் விறுவிறு பயணம் !