கெல்லி மார்செல், ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் நோக்குடன் ஆரம்பத்திலேயே சரவெடி காட்சிகளை இறக்கியது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, கிராபிக்ஸ் என அனைத்துமே அசத்தல். டாம் ஹார்டி மற்றும் 2012 படத்தில் நாயகனாக நடித்த சிவெட்டல் எஜியோஃபர் இந்த படத்திற்கு பெரிய பிளஸ். வெனம் செய்யும் அட்டகாசங்கள், ஐமேக்ஸ் 3டி எல்லாமே சிறப்பாகவே உள்ளது. சிம்பியார்ட்ஸின் கடவுள் மற்றும் அவர் அனுப்பும் ஏலியன்களின் அட்டகாசங்கள், ஒரு காட்சியில் சிம்பியார்ட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் காட்டப்படும் இடத்தில் கைதட்டல்கள் திரையரங்கை அதிர வைக்கின்றன.
எடி கதாபாத்திரத்தில் மீண்டும் அசத்தியுள்ளார் டாம் ஹார்டி. எடி மற்றும் வெனம் இரண்டுமே இணைந்து இருந்தால் தான் ஒரு கோடக்ஸ் உருவாகும் என்றும் அந்த கோடக்ஸ் தான் ‘நல்’ எனும் கடவுளுக்குத் தேவை அதற்காக அவர் ஏவி விடும் பல்லி போன்ற விசித்ர ஏலியன்களிடம் இருந்து ஹீரோ தப்பித்தாரா? கடைசியில் ‘நல்’ நினைத்தது நடந்ததா? வெனம் லாஸ்ட் டான்ஸ் என்பதால் எடி மற்றும் வெனம் என இருவருக்கும் என்ன நேர்ந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
முதல் பார்ட்டில் அட்டகாசப்படுத்திவிட்டு இரண்டாம் பதிப்பில் கோட்டை விட்டதை வெநம் த லாஸ்ட் டான்சில் சரி கட்டியிருக்கிறார்கள் .கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும் எமோஷனல் கனெக்ட் பெரிதாக ஒட்டவில்லை. வெனம் ரசிகர்களையே இந்த படம் ஓரளவுக்குத்தான் திருப்திப்படுத்துகிறது. முதல் தடவை பார்க்கும் ரசிகர்களுக்கு படம் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகும் என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் ஆபாசக் காட்சிகள் இல்லாத நிலையில், குழந்தைகள் இந்த படத்தை உறுதியாக கொண்டாடுவார்கள்.