a K. Vijay Anandh review
படத்தோட பிரீ கிளைமாக்ஸ் தான் படத்தின் ஓப்பனிங் சீன் . அங்கேயே இருந்தது ஆரம்பித்து , பிளாஷ்பேக்குகளாக கதை சொல்லி முடித்த விதத்தில் இயக்குனர் பாபு விஜய் , கொஞ்சம் ஆச்சிரியப்பட வைக்கிறார்.
யோகிபாபு, ஆதித்யா கதிர் , உடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்கள் என்று வழக்கமான நகைச்சுவை , சாலையோர திரு நங்கை பாலியல் தொழிலாளிகள் என்று சில வழக்கமான சலிப்பூட்டும் காட்சிகளுக்கு பதிலாக இன்னும் கொஞ்ச்ம மெனக்கெட்டிருந்தால் சட்டென்று மாறுது வானிலை படம் ஜெய்க்கும் குழுவினருக்கும் சடடென்று ஒரு ஹிட் படம் கிடைத்தது போல அமைந்திருக்கலாம்.
ஜெய் , என்னய்யா மனிதர் சென்னை 28 இல் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். அதே துறுதுறு , அதே பிட்னெஸ் , நடிப்பிலும் அதிகம் மெனக்கெடவில்லை, மிகவும் அசால்டாக அசத்திவிடுகிறார்.
மீனாட்சி கோவிந்தராஜன் , வழக்கத்திற்கு மாறாக ஒரு ஸ்டைலிஷ் ஆன நாயகி வேடம். 300 கோடி வாரிசு என்பதற்காக வெறிநாய்களால் வேட்டையாடப்படும் மயில் போல பரிதாபப்பட வைத்து விடுகிறார். ஜெய் – மீனாட்சி க்கு இடையிலான காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் அற்புதமாக வொர்க் அவுட் ஆகியிருக்கின்றன.
இந்த மனுஷன் நடந்தாலே மிரட்டலாக இருக்கிறது , கருடா ராம் , நாடுமுழுவதும் பல நூறு ஹோட்டல்கள் நடத்தி , தங்கும் ஜோடிகளின் அந்தரங்கங்களை படம் பிடித்து காசாக்க முயலும் பயங்கர வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
சத்யன் , வழக்கம்போல பாதி தமிழ் பாதி இங்கிலீஷ் என்று எம் டி ஆக கலகலப்பூட்டுகிறார்.
காதல் , செண்டிமெண்ட் , நகைச்சுவை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணியிருந்தால் , இந்தப்படம் மிகவும் நன்றாகவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும்.