Eleven

mysixer rating 4.5/5

406

a K Vijay Anandh review

சமீபத்திய தொடரும் மற்றும் ஒரு சில மலையாள க்ரைம் திரில்லர் வகை படங்களை பார்க்கும் பொழுது, இதுபோன்ற படங்களுக்கு மலையாள சினிமாவை அடிக்க ஆளே கிடையாது போலும் என்று தோன்றியது. அட நாங்களும் இருக்கிறோம் என்று சொல்வது போல வெளிவந்திருக்கிறது லெவன்.

கிரிக்கெட்டில் ஜெயிக்கும் அணியில் இருக்கும் 11 பேர்களை  பிளேயிங் லெவன் என்று சொல்வார்கள். அதுபோல இது கில்லிங் லெவன் இன்று சொல்லத்தக்க அற்புதமான க்ரைம் ரிவெஞ் திரில்லர் படமாக லெவன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ்

முதல் பாதியில் தொடர் கொலைகள் அது சார்ந்த புலனாய்வு என்று விறுவிறுப்பாக பயணிக்கும் இந்த படம் ஏன் எதற்கு என்று தெரியும் பொழுது இன்னொரு பரிமாணத்தில் வேகம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது.

கதையையோ கதை களத்தையோ விவரமாக சொல்ல வேண்டாம் என்று பட குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஆமாம் ஏனென்றால் படம் வெளியாகும் நாளில்,  ரசிகர்கள் அதை பிரஷ்ஷாக அனுபவிக்க வேண்டும்.

அதையும் மீறி ஒரே வரியில் இந்த படத்தின் கதையை சொல்வதாக இருந்தால், தன்னை சிலுவையில் அறைந்தவர்களை பழிவாங்க கிருஷ்ணர் அவதாரம் எடுக்கும் ஜீசஸ் என்று சொல்லலாம்.  ஒரு  கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டு என்று சொல்பவர் ஆயிற்றே ஜீசஸ் என்று யோசித்தால், இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களை  பழி வாங்க அவதாரம் எடுத்திருக்கும் கிருஷ்ணர் என்று சொல்லிக் கொள்ளலாம். என்ன அவதாரம் என்பதை திரையில் காண்க ! திரையில் ஒரு மத நல்லிணக்கம்!

இதற்கு மேல் படம் பார்த்து அனுபவித்து இந்த ஒரு வரி கதை உண்மையா என்பதை, இந்த விமர்சனத்தை படிக்கும் ரசிகர்கள் கமெண்டில் பதிவிடுங்கள்.

ஒரு அழகான கிரைம் ரிவெஞ் திரில்லர் ஸ்டோரியாக இந்த படம் பயணிப்பதால் அதனை விறுவிறுப்பு ஆக்குவதற்கு கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றை தாண்டி டி இமானின் பின்னணி இசை மற்றும் அதிரடியான பாடல்கள் பெரிதும் உதவி இருக்கின்றது.

நவீன் சந்திரா, கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடற்கட்டு டீசன்டான ஹேர் ஸ்டைல் கூர்மையான கண்கள் என்று உதவி கமிஷனர் அரவிந்தனாக இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரியா ஹரி, நவீன் சந்திராவை பார்த்த மாத்திரத்தில் – முன்பே குறிப்பிட்டது போல யார் வேண்டுமானாலும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு ஸ்டைலிஷ் ஆன ஒரு கதாபாத்திரம் – காதல் வயப்படும் கதாபாத்திரம். என்னடா விறுவிறுப்பான கதையில் இப்படி காதல் என்று இடைஞ்சல் கொடுக்கிறார்களே என்று நினைக்கும் பொழுது இரண்டாவது பாதியில் அதற்கான  விடையை நச்சென்று வைத்திருக்கிறார் இயக்குனர்.

தனது பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவன் என்றால் எவ்வளவு உயரத்திற்கும் தூக்கிச் செல்வார்கள்,  பிரயோஜனம் இல்லையென்றால் தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள், இந்த தனியார் பள்ளிகள் என்பதை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள், ரவிவர்மா மற்றும் அபிராமி கணக்கச்சிதம்.

காவல்துறை உயர் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன் மற்றும் சஷாங், திலீபன் ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகி ரியா போலவே, அர்ஜைக்கும், அற்புதமான கதாபாத்திரம், மிகச் சரியாக அவர்களை இரண்டாவது பாதையில் இணைத்திருக்கிறார் இயக்குனர்.

வெலன் ,சினிமா ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான கோடை விருந்து!