மையல்

mysixer rating 4/5

532

a K. Vijay Anandh review

நாயகியின் , குவாரி சூழ் மலைக்குன்றுகள் ஒரு பக்கம்,  நாயகனின் நீர் சூழ் கிராமம் இன்னொரு பக்கம் என்று மிகவும் புதுமையான கதைக்களம். வில்லன் பி எல் தேனப்பன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுக்க முழுக்க இருட்டில் படமாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு திருடனின் மனதை மந்திரக்காரி திருடிவிட, அவன் திருந்தி வாழ நினைக்க ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்பதற்கேற்ப செய்த தவறுகள் வினைகளாக தொடர்ந்து வந்து காவு வாங்க,  கண்ணீர் வரவழைக்கும் கிளைமாக்ஸோடு படம் நிறைவடைகிறது.

படத்தின் முதல் அட்ராக்‌ஷன் நாயகி சம்ரிதி தாரா தான்.  பாவாடை தாவணியில் எருமை மாடு மேய்க்கும் தேவதையாக, காளைகளையொத்த  தமிழ் ரசிகர்களின்  மூக்கணாங்கயிறுகள் இனி  இவரது கைகளில் என்றால் அது மிகையாகது. சபிக்கப்பட்ட மந்திரவாதி குடும்பத்தில் சிக்கிக்கொண்ட மயிலாக அழகாக இருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். அழ வைத்தும் விடுகிறார்.

சேதுவுக்கு, ஒரு அற்புதமான அழுத்தமான மிகவும் சவாலான கதாபாத்திரம். பாலா பட நாயகர்களை நினைவுபடுத்தியிருக்கிறார். சம்ரிதியின் காதலில் விழுவது முதல் வில்லன்களை நய்யப்புடைப்பது வரை அவரது நடிப்பது அபாரம்.

பி எல் தேனப்பன் ,வழக்கம்போல வில்லத்தனம் காட்டி மிரட்டியிருக்கிறார்.

சூப்பர்குட் சுப்பிரமணி உள்ளிட்ட காவலர்களாக நடித்திருப்பவர்களும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். அந்த மந்திரவாதி பாட்டியும் அருமை.

மிகவும் குறைவான கதாபாத்திரங்கள், எளிமையான கதை அதே நேரம் வலுவான திரைக்கதை என்று மையல் படத்தை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்  ஏபிஜி ஏழுமலை.

மையல், வித்தியாசமான கதைகளம் !