a K Vijay Anandh review
தீய சக்திகளால் அவிழ்க்கப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக முக்கிய கதாபாத்திரங்கள் நடத்திய போராட்டமே இதன் முக்கிய கதைக்களம்! தொடரை வெற்றிகரமாக நிலைநிறுத்திய மூன்று படங்கள் ஈவிள் டெட் (1981), ஈவிள் டெட் 2 (1987) & ஆர்மி ஆஃப் டார்க்னெஸ் (1992) ஆகும். ஈவிள் டெட் (2013) என்பது ஈவிள் டெட் தொடரின் புதிய தொடர்ச்சியாக வெளியான ரீபூட் படமாகும்! ஈவிள் டெட் ரைஸ் (2023) , ஈவிள் டெட் (2023) படத்தின் ஸ்டேண்டலோன் தொடர்ச்சியாக ஈவிள் டெட் பர்ன் (2026) வெளியாகியிருக்கிறது.
தன் கணவனை இழந்த பிறகு தன் மாமியார் வீட்டில் தனிமையாக வசிக்க முடிவெடுக்கும் ஒரு பெண் தான் நாயகி. ஆனால் அவள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை, அது நரகத்திலிருந்து வந்த ஒரு குடும்ப சந்திப்பாக மாறுகிறது. ரத்தம் தெறிக்கின்றது , ஒவ்வொரு பிரேமிலும். அறிவழகன் இயக்கத்தில் வெந்த ஈரம் படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் , ஏதோ ஒரு வகையில் ஈரம் அதாவது தண்ணீரை காண்பித்து இருப்பார். அதைபோல , இந்தப்படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் ரத்தத்தை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
இறுதிச்சடங்கு செய்யுமிடத்தில் இறந்த கணவனின் ஆன்மா குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடலில் புகுந்துவிட , அதன் பிறகு அது ஒவ்வொருத்தராக பயணித்து , சக்கர நாற்காலியில் இருக்கும் பாட்டியை கூட விட்டு வைக்காமல் சக உறவுகளை வேட்டையாடும் காட்சி பயங்கரம்.
என்னதான் நாம் திரில்லர் படங்கள் எடுத்தாலும் , ஸ்பெஷல் எபக்ட்ஸ் இல் நாம் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும் என்பதை , ஈவில் டெட் பர்ன் [படம் உணர்த்துகிறது.
பேயோடு லிப் டு லிப் காட்சி , அதுவும் ரத்தம் சொட்ட சொட்ட… அதுமட்டுமில்லாமல் , பாட்டியின் பல்செட்டை எடுத்து நக்கும் காட்சி போன்றவை அருவருப்பின் உச்சம். அதெல்லாம் சத்தியமாக இந்தியப்படங்களில் சாத்தியமில்லை.
சொஹைலா யாகூப், டேண்டி ரைட், ஹண்டர் டூஹான், லூசியான் புக்கானன், ஏரல் ஷாண்ட் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பிலிப் லோசானோ வின் ஒளிப்பதிவு , டபுள் டேஞ்சர் இன் இசை மிரட்டலுக்கு உதவியிருக்கிறது.
சாமி படங்கள் இயக்கவேண்டுமென்றால் நம்மூரில் கொஞ்ச நாள் விரதம் இருப்பார்கள். அதுபோல இந்தப்படம் இயக்குவதற்கு முன் அல்லது இயக்கம் காலகட்டத்தில் இயக்குநர் செபாஸ்டியன் வானிசெக் கொடூரமான ஒரு சைக்கோவாக இருந்திருப்பார் போலும்.
EVIL DEAD BURN, இரத்த ஊற்று !!