இதயம் முரளி

Rating 4/5

57

a K Vijay Anandh review

கடைசி வரை காதலை சொல்லமுடியாமல் போன இதயம் படத்தில் வரும் முரளி கதாபாத்திரத்திற்கு மரியாதை செய்யும் விதமாக அல்லது அந்த கதாபாத்திரத்தை மீண்டும் ரசிகர்களுக்கு கொடுக்கும் விதமா இந்த இதயம் முரளி வெளியாகியிருக்கிறது.

எவர்கிரீன் , எவர் காலேஜ் ஸ்டுடன்ட் முரளி பிரதிநிதித்துவ படுத்த , அவரது மகன் அதர்வாவைத்தவிர யாரால் முடியும்…?

இந்த அனுபவம் தவிர, தமன் வரவால் ஷங்கரின் பாய்ஸ் படமும், பிரீத்தி முகுந்தனின் இரட்டை வேடத்தால் ஷங்கரின் ஜீன்ஸ் படமும் ஞாபகம் வரும் அளவிற்கு அவ்வளவு பிரமாண்டம்.

கச்சிதமான நடிகர்கள் தேர்வு அதிலும் , பெரிய பெரிய நடிகர்கள் , பிரமாண்டமான களங்கள் என்று ரசிகர்களை திருப்திப்படுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெனக்கிட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆகாஷ் பாஸ்கரன்.

பிரீத்தி முகுந்தன் , இன்றைய தலைமுறை ஐஸ்வர்யா ராய் போல அவ்வளவு அழகாக இருக்கிறார்.

தமன், பரிதாபங்கள் சுதாகர், ரக்‌ஷன், டிராவிட், கதிர் என்று கலகலப்புக்கு ஒரு கூட்டம் , இவர்களின் கதை கேட்க பாசில் என்று அதகளப்படுத்துகிறார்கள்.

ஸ்கைலைன் விமானத்தில் , முதல் வகுப்பில் பயணித்துக்கொண்டே படம் பார்க்கும் அனுபவத்தை ஆகாஷ் பாஸ்கரன் வழங்கியிருக்கிறார்.

இதயம் முரளி , காதலை எதற்கு சொல்லணும் ? காதலித்தால் போதாதா ? என்கிற ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பியிருக்கிறது என்றால் மிகையல்ல.