a K Vijay Anandh review
ஊரு விட்டு ஊரு வந்து சாம்பியன் ஆகும் சிறுவனின் கதை தான் கராத்தே கிட் லெஜெண்ட்ஸ்.
தெருச் சண்டையில் தனது மூத்த மகனை பறிகொடுத்த ஒரு டாக்டர் தாய் தனது இளைய மகனிடம் இனிமேல் இந்த சண்டை பயிற்சிகள் வேண்டாம் … நீ சண்டையே போடக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, பீஜிங்லிருந்து நியூயார்க் பயணப்படுகிறார்.
வந்து இறங்கிய இரவே நமது நாயகனுக்கு கிடைக்கும் ஒரு தோழி மற்றும் அவரது பீட்சா ஷாப், திரும்பவும் சண்டைக்கு செல்ல வேண்டும் என்கிற விதையை விதைக்கிறது.
அதனைத் தொடர்ந்து அம்மாவுக்கு தெரியாமல் எப்படி பயிற்சிகள் செய்கிறார் ஒரு ஸ்ட்ரீட் பைட் சாம்பியன்ஷிப்பில் வென்று அதில் கிடைக்கும் பரிசு தொகையை தனது தோழிக்கு அர்ப்பணிக்கிறார் என்பது தான் மிகவும் சுவையான விறுவிறுப்பான இந்த படத்தின் கதை.
கராத்தே கிட் வெளிவரும் முன்னரே இதன் ஒன் லைனரை அனைவராலும் ஊகித்திருக்க முடியும். ஆனாலும் காட்சிக்கு காட்சி கண் சிமிட்டாமல் ஜாக்கி சான் தரிசனத்திற்காக, திரையரங்குள் காத்து கிடக்கும் அனுபவமே பேரின்பம்.
சிறுவன் பென் வாங், தனது மாமனாருக்கு பயிற்சி கொடுப்பது, ஜாக்கிசானும் டேனியல் லாரசோவும் இணைந்து பென் வாங் திற்கு பயிற்சி கொடுப்பதாகட்டும், அவர்களது பயிற்சிகளை பார்க்கும் பொழுதே நமது சோம்பேறித்தனங்கள் தொலைந்து போவது போன்ற உணர்வு.
தனது தாய் மற்றும் இரண்டு குருமார்கள், மாமனார் , காதலி என்று அனைவரும் புடை சூழ, இறுதிச்சுற்றில் வில்லனை எதிர்கொண்டு அட்டகாசமான சண்டை செய்து வெல்கிறார் பென் வாங்
கராத்தே கிட் படங்கள் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளை சிறு வயது முதலே ஏதேனும் ஒரு தற்காப்பு கலை கற்றுக்கொள்ள அனுப்புவதும் அவர்களை ஆரோக்கியமாக வளர்ப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை என்பதே அது. கற்றுக்கொண்ட தற்காப்புக் கலையை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதும் இந்த படங்களில் ஒளிந்திருக்கும் உன்னத செய்தி.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கவிருக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கராத்தே கிட் லெஜெண்ட்ஸ் படத்தை பார்த்து மகிழவும்.