மனிதர்கள்

mysixer rating 3/5

175

a K Vijay Anandh review

தோராயமாக இரவு 10 மணிக்கு மேல் ஆரம்பிக்கும், ஆறு நண்பர்களின் ஒரு நான்கு மணி நேர நள்ளிரவு கார் பயணம் தான் மனிதர்கள் படத்தின் ஒருவரி கதை.

அந்த ஆறு பேரில் ஒருவர் கார் டிக்கியில், சலனம் இல்லாமல், சாக்கிற்குள் கட்டுண்டு கிடக்க, அவரை என்ன செய்வது என்கிற மீதி 5 பேரின் பதட்டமும் கோபமும் ஆத்திரமும் வருத்தமும் பயமும் படபடப்பும் கலந்த விறுவிறுப்பான பயணம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்றால் மிகையல்ல.

சாக்கிற்குள் ஒருவன் சலனம் இல்லாமல் இருக்கிறான் என்றால், அந்த ஆறு பேரில் ஒரு மையக் கதாபாத்திரமாக வரும் கபில் வேலவன் பதட்டம் இல்லாமல் இருப்பது சுவராஸ்யம். தக்ஷா, அர்ஜுன் தேவ்,  குணவந்தன், சாம்பசிவம், சரவணன் ஆகியோரும்  சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையாக மனிதர்கள் படத்தை மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ். அனிலேஷ் எல் மேத்யூ வின் இசை மற்றும் தின்சாவின் எடிட்டிங் படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றன.

இந்த கதையை நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி புரிய வைத்து படமாக எடுத்து திரைக்கு கொண்டு வந்திருப்பது இந்த கதையின் வெற்றி என்று சொல்லலாம். அந்த வகையில் இராம் இந்திரா, வித்தியாசமான கதை சொல்லும் இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடிப்பார்.