a K. Vijay Anandh review
இது “ஏங்குழந்தை இல்லை..” என்கிற நிமிஷா சஜயனின் வார்த்தை படத்தின் மையக்கரு என்றால் , “இவளை நான் பத்திரமா பார்த்துக்குவேன்..” என்கிற அதர்வாவின் உறுதிமொழி தான் டி என் ஏ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை
தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பிறந்த குழந்தைகள் கடத்தல் தான் படத்தின் மையக்கரு. பிறந்து சில நிமிடங்களே ஆனா பிஞ்சு குழந்தைகள் ஏன் ? எதற்கு ? யாரால் ? எப்படியெல்லாம் ? எதற்காகவெல்லாம் ? கடத்தப்படுகின்றன என்பதை அறியும் போது நிஜமாகவே பயம் தொற்றிக்கொள்கிறது .
நரபலி மற்றும் ஜோதிட மூட நம்பிக்கைகள் அனைத்து மதங்களிலும் இருந்தாலும் – இந்து மத அடையாளங்களுடன் உள்ளவர்களால் அரங்கேற்றப்படுகிறது என்பதாக நெல்சன் வெங்கடேசன் இயக்க , ஜெயந்தி அம்பேத்கர் எஸ் அம்பேத்கர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ரெட் ஜெயண்ட் ஆல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தப்படம் சர்சசைகளை ஏற்படுத்தலாம். ஒருவேளை அதுவே படத்திற்கு விளம்பரமாகவும் அமையலாம் என்றாலும் , “கோயிலுக்கு வாம்மா உன் குழந்தை கிடைச்சுடும் ..” என்று ஐஸ்வர்யா சொல்ல , அதை ஏற்றுக்கொண்டு நிமிஷா சஜயன் வந்த அந்த தருணத்திலேயே அவரது குழந்தை கிடைத்துவிடுவதாக காட்சிப்படுத்தியிருப்பதில் மேற்குறிப்பிடட சர்சசைகள் மறந்து சமாதானங்கள் தோன்றிவிடலாம்.
இதனை மன அழுத்தம் என்று சொல்வதை மனோதத்துவ மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை , ஒருவகையான ஒழுங்கற்ற நியூரோ செயல்பாடுகள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அடிதடி மருந்தல்ல , அரவணைப்பு தான் மருந்து என்று கருணாகரனை வைத்து அழகாக சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நாயகி கதாபாத்திரமாக்கி இருப்பதும் அதில் நிமிஷா சஜயன் மிக மிக அற்புதமாக நடித்திருப்பதும் படத்திற்கு பெரிய பலம்.
அதர்வா , என்னதான் குடியில் விழுந்து புரள்பவராக அறிமுகமானாலும் இந்தப்படத்தில் ஒரு கூடுதல் அழகுடன் வசீகரித்திருக்கிறார். சுசீந்திரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பிறகு இன்னும் கூடுதல் அழகு .மற்றவர்களால் பைத்தியம் என்று உதாசீனப்படுத்தப்பட்டும் பெண்ணை , அனைவர் முன்னிலையிலும் கெத்தாக கரம்பற்றும் போது பேரழகு . திருமணம் முடிந்த கையோடு தந்தையாவது அழகு. தந்தையான நொடியில் குழந்தையை இழந்து தவித்தாலும் , அடுத்த சில நாட்களில் காவல்துறை அதிகாரி பாலாஜி சக்திவேல் துணையுடன் பல குழந்தைகளை காப்பாற்றுவது, வில்லன்களை பந்தாடுவது என்று மிகசிறப்பான ஒரு இளைஞனாக பட்டையை கிளப்பியிருக்கிறார்.
பிஞ்சு குழந்தைகள் என்பதை மையமாக வைத்து KGF போன்று ஒரு விறுவிறுப்பான வணிக மசாலாவாக டி என் ஏ வை கொடுத்திருக்கிறார் நெல்சன் வெங்கடேசன் .
பிரசவத்திற்கு மருத்துவமனை செல்பவர்கள் அதிக்கபச்ச உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது DNA !