மகாஅவதார் நரசிம்மா

mysixer rating 5/5

89

a K. Vijay Anandh review

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் கிளீம் புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரகலாதனின் உறுதியான பக்தியையும் , பக்தர்களுக்கு ஒன்று என்றால் அழைத்த உடனே ஓடிவரும் நரசிம்ம அவதாரத்தின் மகிமையையும் சொல்லும் அனிமேஷன் படமாக மகா அவதார் நரசிம்மா வெளியாகியிருக்கிறது.

ஜெயபூர்ணா தாஸின் எழுத்தில் , அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப்படத்திற்கு அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் சாம் சி எஸ் .

மகேஸ் குமார் மாண்டலின் சி ஜி மேற்பார்வையில் , காட்சிக்கு காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் , கதாபாத்த்திரங்கள் மிகவும் நேர்த்தியாகவும் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ந்திசாயும் வேளையில் எதுவும் செய்யாதே என்று ஏன் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள் என்பதை இந்தப்படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படி ஒருந்தி வேளையில் , மனைவியின் காம இச்சைக்கு பலியாகி உறவு வைத்துக்கொள்ளும் முனிவர் அவர்களுக்கு பிறக்கும் அசுரர்கள் ஹிரண்யகசிபு மற்றும் அவனது தம்பி என்று படம் ஆரம்பிக்கின்றது.

ஹிரண்யகசிபு வின் தம்பி ஹிரண்யாக்ஷன் , பூமி மாதாவை கடலுக்குள் ஒழித்து வைக்க , வராஹ அவதாரம் எடுத்து அவனை அழித்து , பூமியை மீட்கிறார் விஷ்ணு. அன்றிலிருந்து , விஷ்ணுவை தனது பரம எதிரியாக நினைக்கின்றான் ஹிரண்யகசிபு. தேவர்களையும் நல்லவர்களையும் பாடாய் படுத்துகிறான்.

ஹிரண்யகசிபுவின் கொட்டத்தை ஒடுக்க அவனக்கு பிறக்கப்போகும் குழந்தையை கருவிலேயே தயார்ப்படுத்துகிறார் நாரதர்.

பிரகலாதன் வளர வளர அவனுக்குள் இருக்கும் விஷ்ணு பக்தியும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் தன் மகன் என்றும் பாராமல் , தனது பரம எதிரியான விஷ்ணுவின் நாமத்தை சதா உச்சரித்து கொண்டிருக்கும் பிரகலாதனை கொல்ல பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கிறான் ஹிரண்யகசிபு. எதுவுமே முடியாத நிலையில் தானே கொன்று விட முயல , தூணில் இருந்து வெளிப்பட்டு அவன் கதையை முடிக்கிறார் நரசிம்மர்.

நமக்கு நன்கு தெரிந்த கதை தான் என்றாலும் கண்சிமிட்டாமல் ரசிக்கும் வண்ணம் அற்புதமாக மகா அவதார் நரசிம்மா படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

நரசிம்மருக்கு நாளை என்பது இல்லை என்று சொல்லுவார்கள். அதாவது , அவரை அழைத்தால் , இன்னொரு நாள் போகலாம் என்று தாமதிக்க மாட்டாராம் நரசிம்மர், அது போலவே , நீங்களும் இன்றே மகா அவதார் நரசிம்மாவை பார்த்து மகிழுங்கள்.