தலைவன் தலைவி

mysixer rating 4/5

118

a K. Vijay Anandh review

என்னங்கடா இது காட்டுக்கடத்தலா காத்திக்கிட்டு இருக்காய்ங்கன்னு பாத்தா , அவய்ங்க கதையை , கருப்பன் முன்னாடில சொல்லிக்கிட்டு இருக்காய்ங்க ! கருப்பன் என்ன ஆகம விதிப்படி அமைந்த சாமியா , அமைதியா பேசிகிட்டு இருக்கிறதுக்கு !

கருப்பன் சாட்சியா … கருப்பசாமிகளாக தியேட்டரில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் சாட்சியாதலைவன் தலைவி கதை விரிகிறது.

இன்றைக்கு தேதில , இந்தக்கதைல நடிக்கிறதுக்கு விஜய் சேதுபதியை விடடால் வேற நடிகர்கள் கிடையாது, நித்யா மேனன் மட்டும் என்ன .. அவரும் தான்சரியான நடிகர்களை தேர்வு செய்ததிலேயே இந்தப்படத்தின் வெற்றி ஆரம்பமாகிவிட்டது.

காசவீரன்பேரரசி , அப்படியே ஆனைமலைல பாக்கும் போதுலருந்து , ஏதோ வித்தியாசமா சொல்லப்போறாய்ங்கடா என்று எதிர்பார்ப்பு தோன்றி விடுகிறது. எம் சுகுமாரின் ஒளிப்பதிவுக்கு ஆரம்பத்திலேயே ஒரு சபாஷ் போட்டுவிடலாம்.

பேசாம , ஆகாசவீரன்பேரரசி என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம் , என்ன ஒரு பேருடா ..! அவர்களைப்போன்றே ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பெயரும் மிகவும் வித்தியாசமாக அதே நேரம் மண்ணின் மனத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக , விஜய்சேதுபதி மாமனார் செம்பன் பேரு அரசாங்கம் , மச்சான் ஆர் கே சுரேஷ் பேரு , போர்ச்செல்வன் , தங்கை ரோஷினி பேரு ராகவர்த்தினி அடடா பேரும் நல்லாத்தான் வைச்சிருக்காய்ங்க , சோறும் நல்லாத்தான் வைச்சிருக்காய்ங்கமன்னிக்கவும் பரோட்டாவும் ( அதாவது கதை ) நல்லாத்தான் வைச்சிருக்காய்ங்க

மதுரைன்னாலே சாப்பாட்டுக்கு மட்டுமல்ல , இப்படிப்பட்ட சம்பவங்களுக்கும் தான் பேமஸ். அவய்ங்க குடும்பம் நடத்துறதே ஒரு போருக்கு போற மாதிரிதான். தலைவன்தலைவிக்கு இடையிலான போர் , டைவர்ஸ் வரைக்கும் போயும் தொடருது.

காளிவெங்கட்மைனா , யோகிபாபு , சித்ரா லட்சுமணன் , தேனப்பன், கதிர் என்று அனைவருமே கவனிக்க வைக்கிறார்கள்.

மதுரைக்கார கரடுமுரடான அப்பாஅம்மாவாக சரவணனும் , தீபா ஷங்கரும், நக்கல் புடிச்ச தங்கச்சியாக ரோஷிணியும் , விஷமக்கார தங்கச்சி வீட்டுக்காரனாக வினோத் சாகரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ஆர்கே சுரேஷும் , அற்புதமாக அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

கதை , சுபமாக முடிஞ்சாலும் அப்புறமும் ஏன் டைவர்ஸுக்கு போறாய்ங்கன்னு யோசிப்பீங்க., கருப்பன் குசும்பன்ல அதான் ! பிரச்சினைகளைப்பூராம் அவன் முன்னாடி காட்டுக்கத்தலா கத்திப்புட்டு , அவன் கோயிலுக்கு வெளிய போனவுடனே சமரசம் ஆகிட்டா விட்டுடுவானா , அதான்  அவனும் ஒருளாட்டு காட்டுறான் , கடைசில  (  விளையாட்டுநடிகர் கிஷோர் சொல்வது போல ளாட்டு )

தலைவன்தலைவி , தவிர்க்க முடியாத ஹிட்டு ! இயக்குநர் பாண்டிராஜுக்கும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கும் !