ACCUSED

mysixer rating 4/5

337

a K. Vijay Anandh review

என்னது பர்ஸ்ட் ஆஃப் முடிஞ்சுடுச்சா ? என்று கேட்கத்தோன்றும் அளவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் வேகமாக நகர்ந்த முதல்பாதி.

ஒரு அரசியல்கட்சித்தலைவனின் கொலைவழக்கில் குற்றவாளி என்று காவல்துறையால் அடையாளம் காணப்படும் உதயாவை, சிறையில் இருந்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும், அந்தக்காவலர் குழுவில் பயிற்சி போலீஸான அஜ்மலும் இணைகிறார்.   திட்டமிட்டபடி நீதிமன்றம் செல்கிறார்களா..? வழியில் சிலர் ஏன் உதயாவை துரத்துகிறார்கள்..? போன்ற கேள்விகளுக்கான விடையாக இரண்டாவது பாதியும் விறுவிறுப்பாகவே விரிகிறது.

உதயா, ஒரு தவம் மாதிரி இருந்து இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சின்னச்சின்ன குற்றங்கள் செய்து, சிறைக்குச் சென்று திரும்புகிறார். மற்றபடி, அக்காவின் வளர்ப்பில், ஒரு வெகுளியான மனிதனாக, அழகான ஒரு காதலுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கும் ஒரு இயல்பான மனிதன் கணக்காக, அதாவது கனக சுப்புரத்தினத்தின் சுருக்கம்,  இந்தப்படத்தில் வாழ்ந்துகாட்டியிருக்கிறார். வசன உச்சரிப்பில் இருந்து, உடல்மொழி வரை ஒரு மெனக்கெடல் தெரிகிறது.

அஜ்மல், உயரதிகாரி வீட்டில் வீட்டுவேலைகள் செய்வதிலிருந்து, முதன்முதலாக பொறுப்பேற்பது, ரெளடிகள், காவல்துறை அதிகாரிகள் என்று பல்வேறு  ஆபத்துகளில்  இருந்து உதயாவை காப்பாற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து வரை ஒரு அப்பாவித்தனம் அவர் முகத்தில், அதே நேரம் கடமை தவறாத வைராக்கியம் என்று அட்டகாசப்படுத்திவிடுகிறார்.

குணா ஜீ உள்ளிட்ட ரெளடிகள் சம்பந்தப்பட்டக்கட்சிகள் மூலம் ஒரு பக்கம் பயமுறுத்துகிறார்கள் என்றால், உதயாவுக்கும் அஜ்மலுக்கும் அடைக்கலம் தரும் லாட்ஜ் ஓனர் ரெட்டி யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளில் கொஞ்சம் கலகலப்பும் ஊட்டுகிறார்கள்.

இந்த நடிகர் எங்கேய்யா போனார்..? என்று கேட்கிற அளவிற்கான நல்ல நடிகர் பவன், இதில் அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது தம்பியாக, மனைவியாக, மகனாக  நடித்த மூவருக்குமே நல்ல வாய்ப்பு,  நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நாயகி, தமிழ் சினியுலகில் பூத்த புதுமலர் என்றுதான் சொல்லவேண்டும், ஜான்விகா கலாகேரியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

உதவி கமிஷனர் சரவணனாக சிறப்பாக நடித்திருப்பத்துடன் எதிர்பாராத, திருப்பங்களுடன் அக்யூஸ்டை அட்டகாசமாக இயக்கியுமிருக்கிறார் பிரபு ஸ்ரீனிவாஸ்.

எட்டு எட்டா உனது வாழ்வை பிரிச்சுக்கோ… என்று எல்லோருக்கும் ஒரு தத்துவம் சொன்னார் சூப்பர் ஸ்டார், 40 வயசுக்கு மேல இருந்தா நீலாம் ரெளடியே இல்ல… என்று ஒரு பாட்டி அக்யூஸ்டுகளுக்கு ஒரு தத்துவம் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், உதயா உயிர்பிழைத்துவிடுகிறார், ஏனெனில், அவர் அக்யூஸ்டு மட்டுமே, கன்விக்டட் அல்லவே!

உதயா,  நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தில் பிழைத்துக்கொள்வார் !