சென்னை ஃபைல்ஸ் முதல்பக்கம்

mysixer rating 4/5

115

a K. Vijay Anandh review

ஒரு நல்ல கதையில் அறிமுகவாது பெரிதில்லை, அதன் பிறகு தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளும் நன்றாக இருக்கவேண்டும் என்பது தான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பு திரையுலகில் முழுமையாக ஒருவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது சந்தேகமே இல்லாமல், வெற்றி ஒருவருக்குத்தான். வித்தியாசமான கதைகள், விறுவிறுப்பான கதைகள் என்று இவரைத்தேடி அனைத்தும் வருகின்றன. அப்படி ஒரு நல்ல கதையாக, சென்னை ஃபைல்ஸ் முதல்பக்கம். மறைந்த பிரபல கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனாக, அவரைப்பற்றிய ஆர்டிகிளுக்காக சென்னைக்கு வரும் இவரை, ரெடின் கிங்ஸ்லி ஒரு சங்கிலி பறிப்பில் கோர்த்துவிட, அது அப்பாவியான போலீஸ் அதிகாரி தம்பி ராமையாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல ஆகிவிடுகிறது. ஆம், அவரது எல்லைக்கு உட்பட்ட கொலைகளை வெற்றியின் உதவியுடன் அழகாக துப்புதுலக்கி பெயர் வாங்கியும் விடுகிறார்.

கடைசியில் வழக்கம்போல, கொலையாளியை  சாக்காக வைத்தே, தங்களுக்கு வேண்டிய இரு கொலைகளையும் செய்து முடித்துவிடுகிறார்கள்.

நல்ல விறுவிறுப்பான கிரைம் நாவலாக, இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் அனிஷ் அஷ்ரப்.

வெற்றி, வழக்கம்போல, பக்கத்துவீட்டுப்பையன் போல, வந்து அழகாக நடித்துவிட்டுச்செல்கிறார்.

தம்பி ராமையாவுக்கு இந்தப்படத்தில் ஒரு நல்ல தீனி, வெளுத்துக்கட்டியிருக்கிறார். ஒரு காவலர் அப்பாவியாக இருக்கலாம், முட்டாளாக இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமான கதாபாத்திரம்.

ஷில்பா மஞ்சு நாத் பற்றி சொல்லியே ஆகவேண்டும், ஒரு கெத்தான கதாபாத்திரம் என்றால் இவரை அணுகலாம் என்கிற அளவிற்கு செம கெத்தான ஒரு உடல்மொழி. அதிலும் இதில் இவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரமும் கெத்தான ஒரு பத்திரிக்கையாளர் பாத்திரம், நிறைவாக நடித்திருக்கிறார்.

தொடர் கொலைகள் செய்யும் வில்லனும் மிரட்டியிருக்கிறார்.

ஒரு தொடர் நாவலின் பக்கங்கள் அல்லது அத்தியாயங்கள் போல, இந்தப்படத்தையும் தொடர்களாக எடுக்கலாம்.

சென்னை ஃபைல்ஸ் முதல்பக்கம், விறுவிறுப்பு ! கிரைம் நாவலாசிரியர்களுக்கு மரியாதை !