மாமரம்

mysixer rating 2.5/5

471

a K. Vijay Anandh review

தவறான புரிதலால் ஏற்படும் காதல் தோல்வி. அதனைத்தொடர்ந்து படிப்பை கோட்டைவிடும் அளவிற்கு சோர்ந்துபோகும் நாயகன். காதல் மட்டும் வாழ்க்கை அல்ல, உன் அம்மாவின் கனவை நிறைவேற்றுவது தான் வாழ்க்கை என்று நல்ல அறிவுரை கூறும் நண்பன். அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு படிப்பிலும்,  சண்டைப்பயிற்சிகளிலும் ஜெயிக்கும் நாயகன்.

ஒரு சண்டையில் நாயகனின் இதயம், பாதிக்கப்பட அவனுக்கு தன் இதயத்தை தானமாக கொடுக்கும் காதலி, முறிந்துபோன காதலிலையும் பொருட்படுத்தாமல். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது, நட்டுவைத்த மாங்கொட்டை வளர்ந்து மரமாக அதனை காதலியின் நினைவாக பராமரிக்கும் நாயகன், அந்த மாமரத்தை சாலைவிரிவாக்கப்பணிக்காக அப்புறப்படுத்த முயலும் எம் எல் ஏ அப்புறம் என்ன ஆகிறது என்பதை இரண்டாவது பாகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

2015க்கு முன் நடந்த சம்பவங்களை அழகாக தொகுத்து, ஒரு இளைமையான ஜெய் ஆகாஷாக பட்டையை கிளப்பியிருக்கிறார் நாயகன். நாயகி மீனாட்சி மட்டுமென்ன , ஒரு தைரியமான பெண்ணாக , காதலன் வருவான் என்று காத்திருந்து, ஏமாந்து , கடைசியில் , தனது இதயத்தையே தானமாக கொடுத்து காதலுக்கு இலக்கணமாகிவிடுகிறாள்.

2015 க்கு முன் மற்றும் 2022 ஆகிய காலகட்டங்களில் வரும் நடிகர்களின் உருவ வேறுபாட்டை அற்புதமாக காட்டியிருக்கிறார்கள்.

தேசப்பற்று, நல்லொழுக்கம் போன்றவை அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள .

மாமரம் , சுவை !