Balti

mysixer rating 3.5/5

132

a K Vijay Anandh review

இந்திய சினிமாவில் இரண்டு முக்கியமான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அவர்களது ஆரம்ப கால கட்டத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். 90s கிட்ஸ் வேண்டுமானால் இவர்கள் இணைந்து நடித்த பிளாக் அண்ட் ஒயிட் சினிமாக்களை பார்த்திருக்கக்கூடும். அதன் பிறகு 2கே கிட்ஸ் ஆகட்டும் இன்றைய ஜென் இசட் தலை முறையினருக்கு, அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அவர்களின் ரசனைக்கு தீனி போடும் விதமாக, ஷேன் நிகம் – சாந்துனு நடிப்பில் வெளிவந்திருக்கிறது பல்டி திரைப்படம். அவர்கள் தவிர இன்னும் இரண்டு பேர் மொத்தம் நான்கு நண்பர்கள் . மூன்று கந்துவட்டி மாஃபியாக்கள்.

இவர்களுக்கு இடையிலான போர் தான் பல்டி திரைப்படம்.

கபடி போட்டியில் ஆரம்பித்து ரத்தக்களறியில் படம் முடிகிறது.

எதற்கும் பயப்படாத திறமையான இளைஞர்களை எப்படி தங்களது வசதிக்கு கந்துவட்டி ஆகியாக்கள் பயன்படுத்தி கசக்கி எறிகிறார்கள் என்பதை, விறுவிறுப்பாக திரைக்கதை ஆக்கி பல்டி திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார் உன்னி சிவலிங்கம்.

நாம் வழக்கமாக பார்த்திருக்கக் கூடிய கதை தானோ என்று யோசிக்க வைத்தாலும், முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் அவர்களது பின்னணி ஆகியவை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கின்றன.

கூடவே பழகிய நண்பர்களின் இழப்புகள் குடும்பத்தின் வலிகள் ஆகியவை ஷேன் நிகம் மற்றும் சார்ந்துனுவை வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைக்கின்றன.

ஷேன் நிகம, அற்புதமான உடல் மொழி, அழகான காதல் மற்றும் அக்ரோஷமான ஆக்சன் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக வரும் ப்ரீத்தி அஸ்ராணி, இயல்பான ஒரு நடுத்தர வர்க்க பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

சாந்தனு, அவருக்கு இந்த படத்தின் மூலம் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆரம்பிக்கலாம் என்கிற அளவிற்கு எதார்த்தமான நடிப்பையும் அதே சமயம் அதைவிட அதிகமான ஆக்ஷனையும் வழங்கி இருக்கிறார்.

செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் இருவரும் வெவ்வேறு உடல் மொழியுடன் வில்லன்களாக மிரட்டி இருக்கிறார்கள்.

ஆக்சன் சந்தோஷ் மற்றும் விக்கி மாஸ்டர். இருவரது சண்டை பயிற்சிகளில் இன்றைய தலைமுறை சொக்கிப் போவது நிச்சயம். சண்டை காட்சிகளை மிகவும் நேர்த்தியாக ஆங்கில படங்களுக்கு இணையாக அமைத்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களை இயக்குனர்கள் இயக்குகிறார்களா அல்லது சண்டை பயிற்சியாளர்கள் இயக்குகிறார்களா என்கிற அளவிற்கு படம் முழுவதும் கொஞ்சமாக பேசிவிட்டு நிறைய சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதிலும் ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை போடுகிறார்கள்.

பல்டி ,  தெறிக்கவிடும் ஆக்சன், இளைஞர்களின் அறிவை தெளிய வைக்கும் கதைக்களம்!