இட்லி கடை

mysixer rating 5/5

330

a K Vijay Anandh review

தனுஷ் , இட்லி கடை படத்தை ஒரு ஆன்மீக குரு அல்லது ஒரு மகரிஷி மன நிலையில் இருந்து இயக்கியும் நடித்தும் இருக்கிறார். இவரின் வயதில் இரு மடங்காக இருக்கும் நடிகர்கள் , படத்துக்குப் படம் ஆயிரக்கணக்கான பேரை ரத்தம் தெறிக்க தெறிக்க கொன்று கொண்டிருக்க , இவரோ , வன்முறைகொலை வேண்டாம் என்று மறுத்து அகிம்சை யை போதித்து கொண்டிருக்கிறார்.

முருகன் வாழ்க்கையில் ஒரு 60 நாட்களுக்குள் நடப்பது தான் இட்லி கடை படத்தின் கதை. அதற்குள் மூன்று தலைமுறை வாழ்க்கையை ஒரு நாவல் போல சொல்லியிருக்கிறார்.

மேம்பட்ட வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக முடிவு செய்வது அல்ல, அது நாம் நமக்காக முடிவு செய்வது , அதற்கு என்ன அளவு கோல் இருந்துவிட முடியும் ? ஒரு ராஜ வாழ்க்கையை அடைவது பெரிதல்ல , அதிலிருந்து திரும்பவும்ழைய நிலைக்கு திரும்புவது தானே பெரிது . தனது தந்தைக்காக , ஊருக்காக சிவநேசன் இட்லி கடையை நடத்த முடிவு செய்யும் தனுஷுக்கு ஏற்படும் தடைகளும் அவற்றை எப்படி முறியடித்து தான் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார் என்பது தான் படத்தின் அழகான திரைக்கதை .

ஒரு பக்கம் தந்தைக்காக தனுஷ் , இன்னொரு பக்கம் தங்கைக்காக அருண் விஜய். இருவருக்கிடையில் நடக்கும் மோதல்கள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு போகின்றன.

பொதுவாகவே , தன்னுடன் நடிக்கும் நடிகர்களை தூக்கி சாப்பிடும் வல்லமை பெற்றவர் தனுஷ். அவரோடு சேர்ந்து திரையில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும், அவரே ஈர்ப்பு மையமாக இருப்பர். ஆனால் ஒரு இயக்குராக இட்லி கடையில் , அருண் விஜயை தன்னை ஓவர் டேக் செய்ய வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

அந்தளவிற்கு அருண் விஜய்க்கு ஒரு சிறப்பான செல்ல மகன் & பாசக்கார அண்ணன் கதாபாத்திரம் . இதுவரை இல்லாத அளவிற்கு, காட்சிக்கு காட்சி அட்டகாசமான உடல்மொழிகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல, ஒரு பில்லியனர் தந்தையாக , தனது பிள்ளைகளுக்காக துடிக்கும் சத்யராஜ் , தனுஷின் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமாக தெரிகிறார்.

அவர்களது , நிறுவனத்தில் வேலை செய்யும் நரேன் மற்றும் இளவரசு ஆகியோர் கூட ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஷாலினி பாண்டே , பில்லியனர் விட்டு பெண் பிள்ளை 15 நாட்களில் தனுஷுடன் நடக்கவிருக்கும் திருமணம் , நடக்க வாய்ப்பில்லை என்று அறியும் தருணத்திலிருந்து சங்கராபுரத்தில் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு வீடு திரும்பும் வரை , மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.

பாங்காங் லிருந்து சங்கராபுரம் , ராஜ்கிரண் , கீதா கைலாசம் , சமுத்திரக்கனி , ஆர் பார்த்திபன் , நித்யா மேனன் என்று அத்தனை லெஜென்டுகளையும் அட்டகாசமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் தனுஷ் . தேவர் மகன் படத்தில் சிவாஜி இறக்கும் காட்சியில் தன்னையும் சங்கிலி முருகனையும் அசால்ட்டாக டீல் செய்த விதத்தை காமெடியாக ஒரு மேடையில் சொல்லி கலகலப்பூட்டியிருப்பார் வடிவேலு. ஒரு சராசரி கிராமத்து பெண்ணாக , ராஜ்கிரண் இறக்கும் காட்சியில் சவப்பெட்டியில் சாய்ந்து கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் கயல்நித்யா மேனனை அப்படித்தான் டீல் செய்திருக்கிறார் தனுஷ், அவ்வளவு யதார்த்தம்.

மூன்றாவது தலைமுறையாக , வடிவுக்கரசி , இளம் வயது ராஜ்கிரண்கீதா கைலாசம் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் அழகு !

நாலு நல்லி எலும்புகளை கடித்து துப்பிவிட்டு , தொடை தெரிய மடித்து கட்டிய வேட்டியோடு , பத்து பதினைஞ்சு பேரை வெட்டி சாய்க்கும் ராஜ்கிரணா இது…? நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு , சிவாநேசனாக அகிம்சையை போதிக்கும் அழகே அழகு !

பரோட்டா கடை மாரிசாமியாக சமுத்திரக்கனி , உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவு ஆக , ஆர் பார்த்திபன் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

நாம எட்டாங்கிளாஸ் படிக்கும் போது லவ்வர்ஸா இருந்தோம்ல , என்று நித்யா மேனன் வெள்ளந்தியாக கூறும் போது தனுஷ் மட்டுமல்ல தியேட்டரே வெடிச்சிரிப்பு சிரிக்கிறது. நித்யா மேனன் , தேனிதமிழை உச்சரிக்கும் அழகில் , அத்தனை பேரும் சொக்கிப்போவது நிச்சயம்.

தனுஷ்நித்யா மேனன் , ஒரு அழகான கிராமத்து லிவ்இன் , அதிகப்பட்சம் ஒரே ஒரு முத்தம் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படுகிறது , செக்ஸ் மட்டுமே பிரதானமாக இருக்கும்கர்ப்புற லிவ்இன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் , செக்ஸ் தாண்டிய ஒரு அற்புதம் கிராமத்து லிவ்இன் இல் இருக்கிறது என்பதை புரிந்து திருந்திக் கொள்ள நல்ல வாய்ப்பு.

பாடலாசிரியராக மூன்று பாடல்களை எழுதியிருக்கும் தனுஷ் இரண்டு பாடல்களை பாடியும் இருக்கிறார். எஞ்சாமி தந்தானேபாடலும் , சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று 200 க்கும் மேற்பட்டவர்கள் பாடி ஆடும் காட்சியை படமாக்கிய விதமும் அருமை. வழக்கம் போல ஜிவி பிரகாஷ்குமார் , அருமையான இசையை கொடுத்திருக்கிறார்.

பாங்காங் மற்றும் சங்கராபுரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார் கிரண் கெளசிக்.

இயக்குநர் தனுஷின் மெனக்கடலுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. கிராமத்துக்கடைகளில் ஊற்றப்படும் சாம்பாரின் கன்சிஸ்டெண்சி . சரவணபவன் சாம்பார் போல திக்காகவும் இல்லாமல் , ரசம் மாதிரியும் ஆகிவிடாமல் , அடடா !

இன்றைய தலைமுறை தொலைத்துவிட்ட, ஆட்டுரலையும் அம்மிக்கல்லையும் கதாபாத்திரங்களாவே காட்டியா விதமும் அருமை! இவையிரண்டும் வீட்டில் இருந்தால் , ஆரோக்கியம் கூடவே இருக்கும்!

சொந்த ஊரை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட இன்றைய தலைமுறையினர் தொலைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் குலதெய்வ வழிபாடு. அதையும் சரியாக நினைவு படுத்தியிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.

கன்றுக்குட்டிக்கு சிவா என்று பெயரிட்டு அழைப்பதும் , அதுவும் ஒரு குட்டி கதாபாத்திரமாகவே அழகாக நடித்திருப்பதும் குழந்தைகளைக் கவரும் காட்சியமைப்புகள். கன்றுக்குட்டியை வெட்டப் போகும் சமுத்திரக்கனியை தனுஷ் அடித்து துவைக்கும் காட்சிகளில் குழந்தைகளின் விசில் பறக்கிறது , தியேட்டரில்.

ஒரு தரமானடத்தை தயாரித்த விதத்தில் ஆகாஷ் பாஸ்கரனும் , விநியோகித்த விதத்தில் இன்பன் உதயநிதியும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இட்லி கடைமண் மணம் வீசும் படைப்பு !

ஏழு எட்டு மணிக்கு பிறகு கூட சூரியனை பார்க்காத, தலைமுறை உருவாகிவிட்ட இந்த சூழலில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து ஆறு ஏழு மணிக்கு பசியோடு வரும் தங்களது வாடிக்கையாளர்களின் பசியாற்ற அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும், நம் கிராமங்கள் மட்டுமல்லாது தேசம் முழுவதும் உலகம் முழுவதும் பரவி கிடக்கும் ஆத்மார்த்தமான உணவக உரிமையாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இந்த படம் வந்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்!