a K Vijay Anandh review
ஆரம்பத்திலேயே இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள் மூன்றாவது நபரை அதாவது முக்கிய வில்லனை கொல்வதற்காக, அடுத்த முழு படமும் நகர்கிறது.
பிரஜன், இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கண்டிப்பான அண்ணன் வேடத்தில் நடித்திருக்கிறார். உறவு விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக தன்னை அறியாமல் ஒரு கிரிமினலுக்கு, தனது தங்கையை மணம் முடிக்க திட்டமிட்டு திருந்துவது தான் கதை.
நாயகிகள் ஷர்மிதா, நியா வர்கீஸ் இருவருமே தங்களது பாத்திரங்களை உணர்ந்து கட்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒரே வீட்டிற்குள், வில்லன் அவரைக் கொல்வதற்கு வரும் தந்தையும் மகளும் மொத்தத்தில் வீட்டிலிருந்து தனது காதலனுடன் தப்பிக்க காத்திருக்கும் தங்கை விடிந்தால் தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்க காத்திருக்கும் அண்ணன் இவர்கள் மத்தியில் ஏற்கனவே அக்காவை கொலை செய்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் தங்கையை மணமுடிக்க காத்திருக்கும் வில்லன் என்று வித்தியாசமான திரைக்கதையுடன் சம்ஹாரம் பயணிக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் கணேஷ் சாவரட்டில் கவனிக்க வைத்திருக்கிறார்.
என்னதான் வித்தியாசமான திரைக்கதை என்றாலும் படம் ஆக்கத்தில் இன்றைய ரசிகர்கள் விரும்பும் படி எடுத்ததால் மட்டுமே திரையரங்குகளுக்கு கூட்டம் வரும்.
பட ஆக்கத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம்.