He Man & The Masters of the Universe

Rating 4/5

25

இயக்குனர் டிராவிஸ் நைட் இயக்கத்தில் உருவான ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026), மேட்டெல் நிறுவனத்தின் மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது நேரடி-நடிப்பு திரைப்படம் ஆகும்.

எட்டர்னியாவின் முன்னாள் இளவரசன் ஆடம் கிளெண் (நடிகர் நிக்கோலஸ் கேலிட்சின்), தன் தாயின் சொந்த கோளான பூமியில் 15 ஆண்டுகளாக வாழ்ந்த பிறகு, தன் தந்தையின் கோளான எட்டர்னியாவிற்கு திரும்புகிறான். ஆனால் அங்கே வந்தவுடன் அவன் காண்பது அதிர்ச்சியூட்டும் உண்மையை — தன் சொந்த வீடு தரைமட்டமாகி, அந்த கோளம் முழுவதும் கொடும் போர்வீரனும் மந்திரவாதியுமான ஸ்கெலிட்டார் (நடிகர் ஜாரெட் லெட்டோ)-ன் இரும்புப் பிடியில் சிக்கியிருப்பதை.

தன் குடும்பத்தின் மரபுரிமையை மீட்டெடுக்கவும் உலகைக் காக்கவும், ஆடம் தன் நெருங்கிய நண்பர்களான டீலா (நடிகை கமீலா மெண்டெஸ்) மற்றும் மேன்-அட்-ஆர்ம்ஸ் டங்கன் (நடிகர் இட்ரிஸ் எல்பா) ஆகியோரோடு இணைந்து போரிட வேண்டியிருக்கிறது. மேலும், அவன் தன் உண்மையான அடையாளத்தை — பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனாக — மாற வேண்டியதும் அவசியமாகிறது.

அதன் பின் தீயசக்திகளுக்கும் ஹி மேனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சிகள் தான்  மொத்தபடமும்.

எட்டர்னியாவில் தனது குழந்தை பருவத்தில் அவனுக்கு சண்டைக்கலைகள் கற்றுக்கொடுத்த ஆசிரியர் முதல் அனைவரையும் ஹி மேன் அடையாளம் கண்டுகொள்கிறார்.

ஆனால், மற்றவர்கள் அவன் தான்  ஆடம் என்று உடனடியாக ஏற்க மறுக்கிறார்கள். டீலா உதவியால் ஆடம் அனைவரையும்  தன்னை நம்பும் படி செய்து,  தீயசக்திகளை எதிர்த்து போராடி தனது தந்தை நாடான  எட்டர்னியாவை மீட்கிறான்.

ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் பிரமிப்பாக இருக்கின்றன.

எட்டர்னியாவின் கட்டுமானம் ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு மகுடம் என்றே சொல்லவேண்டும்.

என்னதான் பட ஆக்க தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் முன்னணியில் இருந்தாலும், இது போன்று சூப்பர் ஹீரோக்களின் கதைகள் என்று வரும் போது, முழுக்க முழுக்க கற்பனையாகவே இருக்கின்றன.

இந்தியாவிற்கு வெளியே, அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றிகளையும் பெற்றுவிடுகின்றன.

ஹி மேன் போன்ற படங்களுக்கு இந்தியாவிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

அவர்களை ஏமாற்றாத அத்தனை அம்சங்களையும் கொண்ட படமாக இந்தப்படம் வெளியாகியிருக்கிறது.