a K. Vijay Anandh review
குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை அடைக்காவிட்டால் , கடன் வாங்கியவனின் குடும்பம் கடன் கொடுத்தவனால் எப்படி சின்னாபின்னாமாகிறது என்பதை கண் முன்னால் பார்த்து பயத்தின் உச்சிக்கு செல்லும் ரஞ்சித் , அடுத்த ஒரு வாரத்திற்குள் கடனை அடக்க போராடுகிறார். அதில் ஜெயிக்கிறாரா ? அல்லது அவர் பயந்த மாதிரியே நடக்கின்றதா ? என்பது தான் இறுதி முயற்சி படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை .
நாயகனின் பயம் , நாயகன் குடும்பத்தாரின் அழுகை , கடன் கொடுத்தவரின் மிரடடல் இவற்றை மட்டும் வைத்து முழுமையான படத்தை கொடுத்து விட முடியுமா ? அவற்றுக்கிடையே , ஒரு சைக்கோ கொலையாளி என்கிற கதாபாத்திரத்தையும் அவரை தேடும் காவல் துறை அதிகாரி டி என் பி கதிரவன் கதாபாத்திரத்தையும் புகுத்தி படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் ஜனா.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சித்துக்கு ஒரு னால கதாபாத்த்திரம் . ஹீரோயிசம் என்று கடன் கொடுத்தவர்களை கொன்று குவிக்காமல் சராசரி மனிதனாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை மட்டும் அழகாக செய்து விடுகிறார்.
அவரது மனைவியாக வரும் மேகாலி மற்றும் குழந்தைகளும் அருமையாக நடித்திருக்கிறார்கள் .
சைக்கோ கொலையாளியின் நல்ல முகத்தையோ அல்லது கோர முகத்தையோ கடைசி வரை ஆடியன்ஸுக்கு காட்டாத இயக்குநர் , அந்த கொலையாளியின் ஒரு நல்ல முகத்தை காட்சிகளால் காண்பித்திருக்கும் விதம் அழகு.
அந்த நல்ல முகம் , டி என் பி கதிரவன் மூலம் வெளிப்படும் காட்சிகள் மிகவும் எமோஷலானவை. தெலுங்கு , இந்தி மற்றும் பிற மொழி வில்லன்கள் அல்லது குணச்சித்திர நடிகர்கள் தமிழில் வந்து கலக்குவது போல , டி என் பி கதிரவன் , பிறமொழிகளுக்கு சென்று ஒரு கலக்கு கலக்கலாம், அப்படிப்பட்ட உடல்மொழி மற்றும் குரல்வளம்.
கடன் வாங்கலாம் , கந்துவட்டிக்கு வாங்காதே ! என்று பயமுறுத்தியிருக்கிறது இறுதி முயற்சி.