a K. Vijay Anandh review
திருக்குறள் குணா பாபு வும் அவரது நண்பரும், தனுஷ் கோடியில் ஒருவரது ஜீப்பில் லிப்ட் கேட்டு பயணிக்கிறார்கள். குணா பாபு டைரக்டர் ஆக முயற்சிப்பதாகவும் அவர் சொல்லும் கதைகள் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் இருப்பதாகவுமாக அந்த கதை காட்சிகளாக விரிகிறது.
சாதீய அடிப்படையில் எப்படி மனிதன் சக மனிதனை , கடன் கொடுத்து வாழ் நாள் முழுவதும் கொத்தடிமையாக்கி வைத்திருக்கிறான் ? கொத்தடிமையாக மாட்டிக்கொண்ட அப்படி ஒரு தகப்பன் , தனது மகனை பள்ளிக்கூடம் சேர்க்க எவ்வளவு போராடுகிறான் ? அவ்வளவு போராடடத்தையும் வெற்றிகொண்டு , சிறுவன் சிவா எப்படி பள்ளியில் சேருகிறான் என்பதாக உணர்ச்சி பெருக்குடன் காட்சிகள் நகர்கின்றன.
அந்தக்கதை பிடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் கூற , இன்னொரு கதையாக , சோசியல் மீடியா , யூடியூப் சேனல் என்று விரிகிறது. தாசில்தாராக இருக்கும் அங்காடி தெரு மகேஷ், சமூக வலைத்தளத்தில் பதியப்பட்ட ஒரு மோசமான காமெண்டால் தனது அக்காவை பறிகொடுக்க , நண்பர்கள் ஆரம்பித்த யூடியூப் சேனலால் , அம்பலப்பட்டுப்போன ஒரு அரசியல்வாதி நண்பர்களை துரத்த…
இரண்டு கதைகளுக்கும் ஒரு முடிச்சு போட்டு அழகாக முடிக்கிறார்கள்.
காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தடை அதை உடை படத்தை தயாரித்து இயக்கியுள்ள அறிவழகன் முருகேசன் ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
தனது மனதில் உதித்த அருமையான அதே நேரம் சமூக சிந்தனையை உள்ளடக்கிய காட்சிகளை அழகாக கோர்த்து ஒரே நடிகரை இரு வேறு கதாபாத்திரத்திரங்களுக்கு அற்புதமாக பயன்படுத்திக்கொண்டு, பிரமிக்கத்தக்க அளவில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஒரு கதையில் , தனது மகனை பள்ளியில் சேர்க்க போராடும் அப்பாவாக வரும் பாரி , இன்னொரு கதையில் ஒரு கேங்ஸ்ட்டர் ரேஞ்சில் அசத்துகிறார் ..
ஒரு கதையில் , ஆக்ரோஷமான கிராமத்து அக்காவாக வரும் கௌதமி , இன்னொரு கதையில் சாந்தமான மருத்துவராக வருவதும்,
ஒரு கதையில் நல்லவரா கெட்டவரா என்று தெரியாத தலைமை ஆசிரியராக வரும் வேல்முருகன் , இன்னொரு கதையில் டீக்கடை பாயாக வருவதுமாக மிகவும் சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, K.M.பாரிவள்ளல் , திருவாரூர் கணேஷ் , மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், M.K.ராதாகிருஷ்ணன் , வேல்முருகன் , காத்து கருப்பு கலை, பாக்கியம், கௌதமி,
சுபாஶ்ரீ, சூரியப்ரதாபன் ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஆகியோரின் ஒளிப்பதிவு , டாய்சி யின் படத்தொகுப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.
அதிகம் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்துக்கொண்டு தன்னால் முடிந்தளவு தடையை உடைத்து சிறப்பான படம் ஒன்றை கொடுத்திருக்கிறார் அறிவழகன் முருகேசன்.
தமிழ் ரசிகர்கள் , இந்தப்படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் !
