a K Vijay Anandh review
நாயகன் விமல், சிருஷ்டி டாங்கே உட்பட நூற்றுக்கணக்கான நடிகர்களையும், ஒரு பிரம்மாண்ட யானையையும் வைத்துக்கொண்டு மலை மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் முழு படத்தையும் எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் அல்ல, அதற்காகவே இயக்குனர் தினேஷ் கலைச்செல்வனுக்கு பாராட்டுக்கள்.
குரங்கணி என்கிற மலைவாழ் பழங்குடி மக்களின் கோயிலில் இருந்து அரிதான ஒரு சாமி சிலையை கடத்துவதற்கு தீய சக்திகள் முயல்கின்றன, அதிலிருந்து அந்த சிலையை காப்பாற்றப்பட்டதா ? என்பதுதான் இந்த படத்தின் ஒரு வரி கதை.
கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை நிறைந்த மலை பாங்கான இடங்களில் மனாஸ் பாபு டிஆரின் ஒளிப்பதிவு அருமையாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்திருக்கிறது.
மலைவாழ் பழங்குடி இனத்தின் தலைவனாக, விமல் அவரது மனைவியாக சிருஷ்டி டாங்கே ஆகியோர் அற்புதமாக நடித்திருக்கின்றனர். அவர்களது மகள் அல்லியாக நடித்திருக்கும் இலக்கியா கண்கலங்க வைக்கிறார்.
ஜான் விஜய், கபீர் துஹான் சிங் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக, கங்காவாக நடித்திருக்கும் மகிமா குப்தாவும் மிரட்டி இருக்கிறார்.
சேனா என்கிற பெயர் தாங்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் என்கிற யானைக்கு நிகராக பயமுறுத்தும் கம்பீர உடற்கட்டுடன் இன்னொரு வில்லன் இடும்பனாக விஜய் சேயோன் நடித்திருக்கிறார். நம்ம ஊர் இயக்குனர்கள் . அவர்கள் இயக்கம் தமிழ் படங்களுக்கு கபீர் துகான் சிங் போன்ற வில்லன்களை அவர்கள் மொழியில் அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக கொடுத்து நடிக்க வைக்கிறார்கள். அதைப்போலவே | நம் இயக்குனர்கள் தமிழ் தாண்டி பிற மொழிகளில் படங்கள் இயக்கிக் கொண்டும் இருக்கிறார்கள், அப்படி அவர்கள் பிற மொழிகளில் படங்கள் இயக்கும் பொழுது விஜய் சேயோன் போன்ற நல்ல தகுதியான உடற்கட்டுடன் இருக்கும் நடிகர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான், நம் தமிழ் திரையுலகை சேர்ந்த திறமையான நடிகர்கள் பிற மொழிகளில் வாய்ப்புகள் பெற்று பிரகாசமடைய முடியும்.
மாணவர்களை மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் பேராசிரியர் கதாபாத்திரத்தை வாடா புரபொசர் போடா புரபொசர் என்று யோகி பாபு அழைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மகாசேனா, குழந்தைகளுடன் கண்டுகளிக்கக்கூடிய அற்புதமான பொழுதுபோக்கு!