சல்லியர்கள்

mysixer rating 4/5

45

a K Vijay Anandh review

விடுதலைப்புலிகள் , ஈழப்போராட்டம் , ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட 2009 வரையிலான காலகட்டங்களை மீண்டும் பார்க்கும் போது , ஒரு குற்றவுணர்ச்சி நம்மை பாடாய் படுத்துகிறது.

அதிலும் , போர்க்களத்தில் தன்னைக் கொல்ல வரும் பகைவனுக்கும் மருத்துவம் பார்க்கும் உன்னத குணம் கொண்ட விடுதலைப்புலிகளை நினைக்கும் போது , அடடா இவர்களையா நாம் தவற விட்டுவிட்டோம் என்கிற வருத்தம் மேலோங்குகிறது .

போர்க்களத்திலும் மனிதாபிமான செயல்பாடுகளுடன் நடந்துகொள்ளும், விடுதலைப்புலிகளின் மருத்தவப்பிரிவான சல்லியர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம்.

டாக்டர் நந்தினியாக நடித்திருக்கும் சத்தியாதேவி , அப்படியே , ஈ விடுதலைக்களத்தை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் . அவருக்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தவுடன் , வழக்கமாக போட்டிருக்கும் இரட்டைசடையை, உச்சியில் கோர்த்து பெண்புலியாக மாறும் அந்த ஷாட் அற்புதம்.

பராசக்தி படம் பத்தாம் தேதி தானே வெளியாகிறது , நடுவுல ஏன் பராசக்தி ஓடுகிறது என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு , இன்னொரு பக்கம் இன்னொரு மருத்துவராக நடித்திருக்கும் மகேந்திரன் , அடடா அடடாகாசமான தோற்றம் , நடை , உடை, பாவனை என்று சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் வரும் இன்னொரு காதல் ஜோடியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

குருதி சேகரித்து கொடுக்கும் கிராமத்தனாக கருணாஸ் அவரது மனைவியாக நடித்தவர் என்று அனைவருமே சிறப்பு.

கொடூர சிங்கள ராணுவ வீரராக திருமுருகனும் பயமுறுத்தியிருக்கிறார்.

தமிழினம் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து தற்காத்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது.

அற்புதமான படைப்பை இயக்கியிருக்கும் கிட்டு , வெளியிட்டிருக்கும் சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

போதுமான திரையரங்குகள் கிடைக்காத நிலையில் , இந்தப்படம் OTTPLUS தளத்தில் வெளியாகியிருக்கிறது.