வா வாத்தியார்

mysixer rating 3/5

24

a K.Vijay Anandh review

தமிழகத்தில் நிலவும் இன்றைய மோசமான சட்டம் ஒழுங்கு, அதிகார துஷ்பிரயோகம், மக்களின் அவல நிலை ஆகியவை சரியாக வேண்டுமானால்,  வாத்தியார் வந்தாத்தான் டா  முடியும் என்கிற ஆசை சாமான்யனுக்கு எழுந்தால், அவன் வீட்டிலோ வெளியிலோ நாலுபேரிடம் புலம்பித்தள்ளுவான். அதுவே ஒரு படைப்பாளிக்கு ஏற்பட்டுவிட்டதென்றால், எம் ஜி ஆரின் தீவிர ரசிகரின் மகனான ஞானவேல் ராஜா போன்ற தயாரிப்பாளர் கிடைத்து, ”வாத்தியார் வந்தாத்தான் டா” என்கிற கதைக்கருவுடன் படமாக எடுக்கப்பட்டு பல லட்சம் பேர்களைச் சென்றடையும்.

நெஞ்சுக்கு நீதியிலிருந்து வா வாத்தியார் , நலன் குமாரசாமியையும் மாற்றிவிட்டார் எம்.ஜி.ஆர் என்றே சொல்ல வேண்டும்.

இந்தப்படம் முழுக்க முழுக்க எம் ஜி ஆர் ரசிகர்களுக்காக, கார்த்தி நடித்திருக்கும் படம். கார்த்தியாகவும் வருவதால், கார்த்தி ரசிகர்களுக்கும் பிடிக்கும், குறிப்பாக கிரித்தி ஷெட்டியுடனான டீஸ் மற்றும் காதல் காட்சிகளில் இராமேஸ்வரமாக இராமு காட்டியிருக்கும் சேட்டைகள் அதகளம்.   என்னது எம்பேரன் எம் ஜி ஆர் மாதிரி இல்லையா என்று ஏக்கத்தில் தாத்தா ராஜ்கிரண் செத்துப்போவதிலிருந்து இராமு என்கிற இராமச்சந்திரனாக அவர் எடுக்கும் அவதாரமும் அட்டகாசம்.

தான் உண்டு,  தன் கட்டிங் உண்டு இருக்கும் காவல்துறை அதிகாரியை, எம் ஜி ஆராக மாற்றி நல்லவராக ஆக்கும் பொறுப்பு, ஆன்மாக்களுடன் பேசும் நாயகி உ , கிரித்தி ஷெட்டிக்கு.   உவாக நன்றாகவே உதவியிருக்கிறார்.  மொழி தெரியாவிட்டாலும் இவரது நடன அசைவுகளுக்காகவே தெலுங்கு பாடல்களை வெறித்தனமாக பார்த்து ரசித்தவர்களுக்கு எந்த குறையும் இல்லாதவண்ணம் இந்தப்படத்திலும் மிகவும் கடினமான நடன அசைவுகளை அசால்ட்டாக் ஆடி விருந்து படைத்திருக்கிறார்.

ராஜ்கிரண், ரிக்‌ஷாக்காரன் எம் ஜி ஆர் கெட்டப்பிலேயே சுற்றுவது, துறுதுறுவென்று நடப்பது என்று, வழக்கம்போல சிறப்பாக நடித்திருக்கிறார்.

“ வாத்தியாரைத்துக்கனும்..” என்று கொடுத்தால் அப்படியே சத்யராஜ் பேசிவிடுவாரா..? ”வாத்தியார் வேஷம் போட்டு சுத்திக்கிட்டு இருக்கிறவனை தூக்கனும்..” என்று எம் ஜி ஆர் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை குறையாத வண்ணம் பேசியிருக்கிறார்.  அவரது கதாபாத்திரங்களில் இன்றளவும் பட்டையைக்கிளப்பிக் கொண்டிருக்கும் அமாவாசை கதாபாத்திரத்தையொத்த பெரியசாமி என்கிற பெரிய இடங்களுடன் டீலிங் பேசும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

அவரது மகளாக, சில காட்சிகளிலேயே வந்தாலும், சில்பான்ஞ் இந்த ஷில்பா, ( சின்னி ஜெயந்த் ஸ்டைலில் படிக்கவும் )

அவரது குரலைப்போலவே அடர்த்தியான புருவத்துடன் நிழல்கள் ரவி, எம்.ஜி,ஆரின் ஜெராக்ஸ் போன்று ஆனந்த்ராஜ், நலனின் நெஞ்சுக்கு நீதி நாயகன் கருணாகரன், ராம்திலக் என்று அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பாதியில் நிறுத்தினால் எப்படி இருக்கும் ? அப்படி ஒரு விநாடியில் படம் டக்குனு முடிந்துவிடுகிறது.

பெண்கள் யாராவது காப்பாத்துங்க…என்று குரலெழுப்பினால் எம் ஜி ஆர் வந்துவிடுவார் என்று காட்டிருப்பது சுவராஸ்யம், இன்றைய தேதியில் அது சாத்தியமானல், ஆயிரத்தில் ஒருவன் பத்தாது, ஆயிரமாயிரம் எம்.ஜி.ஆர்கள் தேவைப்படும்…

வாத்தியார் தான் மாணவர்களுக்கு மார்க்கு போடுவார், இந்த வாத்தியாருக்கு ரசிகர்கள் மார்க்கு போடவேண்டும்,  நல்ல மார்க்கு போடுவார்கள்!