அனந்தா

புட்டபர்த்தி சத்யசாய்பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் ஆவணப்படம்

46
  • a K Vijay Anandh review

பொதுவாகவே இந்து சாமியார்கள் என்றாலே பல்வேறு விமர்சனங்கள் மற்றும் எதிர்வினைகளைக் கடந்து தான், சமூகத்திற்கான தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இறைவன் தங்களுக்கு இட்ட கடமைகளை இன்னதென்று அறிந்து முடிவு செய்து கொள்ளும் அவர்கள், விமர்சனங்களைப் பற்றி பொருட்படுத்தாமல், தன்னை நம்பி வரும் பக்தர்களின் வாழ்வில் பல அதிசயங்களை நிகழ்த்துகிறார்.

அந்தவகையில், புட்டபர்த்தி சத்யசாயும் விதிவிலக்கல்ல.

எத்தனையோ லட்சம் பேருக்கு பசியாற்றல், எத்தனையோ கோடி பேர்களுக்கு வாழ்க்கையின் இன்ப துன்பங்களைச் சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம், ஏன் தமிழ் நாட்டிற்கென்று பிரத்யேகமாக நீர் வளத்திட்டம் என்று எத்தனை எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

அவரால், அவரது அற்புதத்தால் தங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களைச் சொல்லும் ஒரு ஐந்து பேரின் கதைதான் அனந்தா என்கிற ஆவணப்படம்.

கேராளவிலிருந்து , ஒய் ஜி மகேந்திரன் குடும்பம், மும்பையில் ஜெகபதி பாபு, சென்னையில் அபிராமி, வாரணாசியில் இருந்து சுஹாசினி மணிரத்னம்,  கொல்கத்தாவிலிருந்து ஜான் – இவர் உண்மையில் கலிபோர்னியா என்று தேசத்தை இணைப்பது மட்டுமல்ல, சர்வதேசத்தையும் இணைக்கும் மகா பணியினை ஆன்மீக குருக்கள் ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் சாதி, மதம்,  நிறம், பொருளாதார அடிப்படை என்று மக்களைப் பிரித்துப்பார்ப்பதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐவரின் மூலமாக , நிஜமாக அப்படி அற்புதங்கள் நடந்தவர்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெகபதி பாபுவின் விமானப்பயணம் மற்றும்  அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கொள்ளை காட்சிகள் அற்புதம்.

மனைவியை பறிகொடுத்து சாய் மீது கோபம் கொள்ளும் ஒய் ஜி மகேந்திரா, பின் உண்மை தெரிந்து உருகும் காட்சிகளில் ஸ்ரீ ராகவேந்திரா படத்தை மறுபடியும் கண்முன் கொண்டு வருகிறார்.

கலிபோர்னியா காட்டுத்தீயில் ஜான் வீடு தப்பிப்பது போன்ற அதிசயங்கள் அன்றாடம் இறையருளாலும் குருமார்களாலும்  நிகழ்த்தப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.

சுஹாசினி மணிரத்னம் எப்பொழுதுமே ஸ்பெஷல் தான், கனிதமேதை ராமானுஜனுக்கு அம்மாவாக நடித்த பிறகு, இன்னுமொரு அற்புதமான கதாபாத்திரம். கஜேந்திர மோட்சம் சம்பந்தமான காட்சியை மருத்துவர்களிடம் விவரித்து, “ நாராயணா… “ என்று அவர் சொல்லும் போது, பிரகலாதன் அழைப்பில் வந்த நாசிம்மரைப்போல, சத்யசாயும் வந்துவிடுகிறார், மருத்துவர் அவதாரத்தில்! வந்து அவரது மகனைக் காப்பாற்றிவிடுகிறார்.

சத்யசாய் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் கல்வி நிலையங்களில் வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணாக்கர்கள் படிக்கிறார்கள், நடத்தப்படும் மருத்துவமனைகளில் அன்றாடம் ஆயிரமாயிரம் ஏழைகள் தரமான சிகிச்சை பெறுகிறார்கள்.

இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் மனித குலம், ஆன்மீக குருக்கள் மூலமாக நிதானம் மற்றும் அமைதி பெறுகிறது.

பந்தபாசம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றை களைந்து அப்படி ஒரு வாழ்க்கை, மகானாக வாழ்வது கடினம். அவர்கள், அவர்களுக்கானவர்கள் அல்ல, உலக மானிடர்களுக்கானவர்கள்!

புட்டபர்த்தி சத்யசாயை போற்றுவோம்!

தனது படங்களைப் போல விறுவிறுப்பாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

சத்யசாயின் அற்புதங்கள் சிறந்ததா ? தேவாவின் பின்னணி இசையும் பாடல்களுக்கான இசையும் சிறந்ததா ? என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்தளவிற்கு, தேவாவின் இசை அற்புதங்களை விஞ்சி பார்ப்பவர்களின் இதயத்தை வருடுகிறது.

புட்டபர்த்தி சத்யசாய் குறித்தான அனந்தா என்கிற இந்த ஆவணப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது.