a K Vijay Anandh review
கை கால்கள் இழுத்துக் கொண்டு வேலை வெட்டிக்கு போக முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் நிலையிலும், மனைவி வளர்க்கும் சேவலை எப்படியாவது அடித்து சாப்பிட்டு விட வேண்டும் என்று ஆசை கொள்ளும் கணவன், நிதர்சன சி காளிதாஸ்.
வேலை வெட்டிக்கு செல்ல இயலாமல் படுத்த படுக்கையாக கிடைக்கும் கணவனை பராமரித்துக் கொண்டும் கூலி வேலைக்கு சென்று கொண்டும் வீட்டின் ஒரே ஆறுதலான சேவல் மற்றும் அடைகாக்கும் கோழிகளை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டிருக்கும், மிக முக்கியமாக இந்த பாழாய் போன குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுதலையை ஏங்கித் தவிக்கும் மனைவியாக மணிமேகலை.
இருவரின் ஆசைகளும் ஒரே நேரத்தில் நிறைவேறுவது தான் லிட்டில் விங்க்ஸ் குறும்படத்தின் அட்டகாசமான திரைக்கதை.
20 நிமிடங்களே ஓடும் படத்திற்கு 30 லட்சம் ரூபாய் செலவு செய்து எடுத்திருக்கிறார்கள் என்று அறியும் போதே இதன் தரம் விளங்கும்.
சரவணன் மருதுவின் ஒளிப்பதிவு, சந்தோஷ் தயாநிதி இன் இசை, விஜய் மற்றும் தாமுவின் கலை இயக்கம் என்று ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது.
பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றிருக்கும் இந்த குறும்படத்தை இயக்கியிருக்கிறார் நவீன் மு
மணிமேகலை, மிகச் சிறந்த ஒரு நடிகை, இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்த குறும்படத்தில் இவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு மிகப் பெரியது என்று சொல்லலாம் என்கிற அளவிற்கு, அன்றாடம் கணவனுக்கும் பணி செய்து கூலி வேலைக்கும் சென்று வருவது என்று ஒவ்வொரு பிரேமிலும் தனது வலியை கண்களில் கொப்பளித்து இருக்கின்றார்.
நிதர்சன சி காளிதாஸ், இந்த கதாபாத்திரத்திற்கு என்றே அவதாரம் எடுத்தவர் போல, வாழ்ந்து காட்டி இருக்கிறார். பல்வேறு முயற்சிகள் செய்து அந்த சேவலை பிடித்து விட வேண்டும் என்று அவர் போடும் திட்டங்கள், ரசிக்கத்தக்கவை.
இவர்கள் தவிர இன்னொரு ஜோடியாக நடித்திருக்கும் அந்த சேவலும் அடைகாக்கும் கோழியும் அட்டகாசம்.
இந்த இரு ஜோடிகளையும் தவிர மதுரை ராம்ஜி, கோழியை அடைக்கும் கூண்டிற்குள் ஒளிந்திருந்து கோழிகளைப் பிடிக்கும் அழகே அழகு.
சேவல் மற்றும் அடைகாக்கும் கோழியின் சத்தங்களை மிகவும் அற்புதமாக ஒலிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
சேவல், துணைப் பிணமாக சென்றுவிட்டாலும், அதன் வாரிசாக முட்டையிலிருந்து லிட்டில் விங்ஸ்சய் விரித்துக்கொண்டு ஒன்று வெளியே வருகிறது, அந்த காட்சி கவிதை!
லிட்டில் விங்க்ஸ், குறும்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் youtube சேனலில் காணக் கிடைக்கிறது.