a K Vijay Anandh review
உன்னுடைய அம்மாவைப் போலவே நீயும் ஓடிப் போயிருவ… என்கிற அவமானகரமான வார்த்தைகளை அக்காவும் தம்பியுமாக கேட்டு கேட்டு வளர்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இந்த படத்தில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள்.
அதற்காகவே காதலும் வேண்டாம் ஒரு இழவும் வேண்டாம் என்று கைகாட்டியவனை கரம் பிடித்த அக்கா.
அதற்காகவே தனது சந்தோஷங்களை தியாகம் செய்து காதலை வெறுத்தே வாழும் நாயகன் தம்பி. காதல் செய்யத்தான் கூடாது, ஆனால் வேலை செய்ய வேண்டுமே!
Nee Forever என்கிற ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாட்டுடன் வாழ்பவர்களுக்கான, வாழ விரும்புவர்களுக்கான செயலியை உருவாக்குகிறான்.
காதலே செய்யத் தெரியாதவன் எப்படி காதலர்களுக்கான செயலியை உருவாக்க முடியும் என்கிற முதலீட்டாளரின் கேள்வியால், காதல் செய்து பார்ப்போமே என்று களம் இறங்குகிறான்.
இன்னொரு பக்கம், இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளரை சந்தித்தால் நீ ஏன் ஒரு காதல் கதை எழுதக்கூடாது, என்று கேட்கிறார்.
ஆக, ஆப் டெவலப்மெண்ட் செய்வதற்காக காதலிக்க வருபவனும், லவ் ஸ்டோரி எழுதுவதற்காக காதலிக்க வருபவளும் ஆக கதை சுவராசியமாக டேக் ஆப் ஆகிறது.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை ரசிகர்கள் யூகிக்க முடியும் என்றாலும் மிகவும் வித்தியாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அசோக் குமார் கலைவாணி.
நாயகனாக சுதர்சன் கோவிந்தும் நாயகியாக அர்ச்சனா ரவியும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுதர்சன் கோவிந்தன் மேக் ஓவர், மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருக்கின்றது.
நாயகனின் நண்பனாக வரும் விஜே பிரது, பல இடங்களில் வசன உச்சரிப்புகளில் சீயான் விக்ரமின் நினைவூட்டுகிறார்.
நாயகனின் கண்டிப்பான தாத்தாவாக வரும் ஒய் ஜி மகேந்திரா இதுவரை இல்லாத அளவிற்கு வசன உச்சரிப்புகளில் கவனம் செலுத்தி அமைதியான அதே நேரம் மிகவும் கண்டிப்பான தாத்தா சிறப்பாக நடித்திருக்கிறார்.
நிழல்கள் ரவி பற்றி சொல்லவும் வேண்டுமோ! காதலை பிரிந்தாலும் கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழும் , தந்தையாக நெகிழ வைத்திருக்கிறார்.
இந்த தலைமுறை, சிங்கிள் மதர் , சிங்கிள் பாதர் கலாச்சாரத்திற்குள் வாழப்பழகி விட்டது என்பது ஒரு துரதிஷ்டம்.
ஒய் ஜி மகேந்திரா முதல், இன்னொரு பக்கம் தயாரிப்பாளராக இருக்கும் ரித்திகா வரை , அத்துடன் இளம் காதலர்களுக்குமான ஒரு நல்ல பாடத்தை நீ பார்எவர் போதிக்கிறது.
ஜென்சி தலை முறைகளுக்கான கதையை எல்லா தலைமுறைகளும் உட்கார்ந்து ரசிக்கும் வகையில் அட்டகாசமாக இயக்கியிருக்கிறார் அசோக் குமார் கலைவாணி.
Victory for sure for Nee Forever !