Happy Raj

Ratings 4/5

3

a K Vijay Anandh review

பொள்ளாச்சி , ஒரு மினியேச்சர் தேவர்மகன் சக்திவேல் மாதிரி, ஹேப்பி ராஜ் என்கிற ஹேப்பி ஜிவி பிரகாஷ் குமார் அறிமுகமாகிறார். அதே ஹேர் ஸ்டைல், கிட்டத்தட்ட அதே உடல்மொழிகள், குறிப்பாக ஏமாற்றத்துடன் கூடிய அழுகையை வெளிப்படுத்தும் போது.

நான் ஆடிக்கிட்டே இருப்பேன் .. நான் ஆடிக்கிட்டே இருப்பேன்செம்ம , ஜஸ்டின் பிரபாகரன் இந்த மாதிரி இசையமைத்தால் , யாராக இருந்தாலும் ஆடிக்கிட்டே தான் இருப்பார்கள்.

கிராமப்பகுதியில் இருந்து டி வேலைக்கு பெங்களூர் செல்லும் ஜிவி பிரகாஷ் குமார், டீம் லீடர் ஸ்ரீ கெளரி பிரியா மீது காதல் கொள்ள அடுத்து நடக்கும் களேபரங்கள் தான் கதை.

அப்பா யார்னு சொல்லிறாத , உன்னை எவளுக்கும் பிடிக்காது என்கிற முன்னாள் காதலியின் வார்த்தைகள் புத்தியில் ஆழமாக பதிந்து விட , அப்படி என்ன அவர் அப்பா ? என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் குமாரின் படம் என்று சொல்வதை விட , இன்னொரு வகையில் , வினித்அப்பாஸ் காதல் தேசம் மாதிரி , ஜார்ஜ் மரியன்அப்பாஸ் காம்பினேஷனில் வெளிவந்திருக்கும் தந்தையர் தேசம் என்று சொன்னாலும் சரியாக இருக்கும். அந்தளவிற்கு , மிகவும் வித்தியாசமான காம்பினேஷன்.  இருவரும் வழக்கம் போல மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் மரியன் , அப்பாவாக நடிக்கிறார் என்றாலே , அவருக்கு அற்புதமான காட்சிகளை உருவாக்கிவிடுகிறார்கள் இயக்குனர்கள். இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான , ஒரு கம்பீரமான கதாபாத்திரமாக உருவாக்கி அவருக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள் .

அப்பாஸ் , என்ன ஒரு காம்பேக் எனும் அளவிற்கு , அவர் போடும் அந்த இரண்டு ஸ்டெப் நடனம் போதும் , வாட் நடிகன் என்று சொல்ல வைத்து விடுகிறார்.

ஸ்ரீ கெளரி பிரியா, அழகும் திறமையும் நிறைந்த நல்வரவாக ரசிகர்களை மகிழ்விப்பார்.

பெங்களுர் நவ நாகரீக மங்கைகளுக்கே ப் கொடுக்கும் கீதா கைலாசம், ஜிவி பிரகாஷ் குமாரின் அம்மாவாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

டேய் அவரு தேசிய விருது வாங்கின மியூசிக் டைரக்டர்டா என்று அவ்வப்போது சொல்லத்தோன்றும் வகையில் , ஜிவி பிரகாஷ் குமாரை அடிக்கடி கலாய்க்கிறார், அதிர்சசி அருண் . இதெல்லாம் அப்படி இப்படி என்று திரும்பினால் ரசிக்க முடியாமல் போய்விடக்கூடும்.

போனவாரம் , தனது இசையின் மூலம் கென்னுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமாருக்கு , இந்த வாரம் ஹேப்பி ராஜ் படத்தை வெற்றிப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன்.

நாம் குழந்தையாக இருக்கும் போது அப்பாவிடம் இருக்கும் பிணைப்பு , வளர வளர உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக குறைந்துவிடுகிறது என்கிற யதார்த்தத்தை , காதல் கலாட்டா எமோஷனல் என்று கலந்து கட்டி ஒரு செம்ம விருந்துடைத்திருக்கிறார்கள்.

ஹேப்பி ராஜ் , கோடை கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.